ரூ.5.5 லட்சம் கோடி செலவில் 60 நதிகள் இணைப்பு திட்டம்
ரூ.5.5லட்சம் கோடி செலவில் 60 முக்கிய நதிகள் இணைப்பு திட்டம் நடைபெற உள்ளது.
நாட்டின் வட மாநிலங்களில் பெரும்பாலனவை வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றன.அதே நேரத்தில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் வறட்சியில் சிக்கி தவித்து வருகின்றன. இந்த நிலையை மாற்ற பிரதமர் மோடி தலைமையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நதிகள் இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து நாட்டின் மிகப்பெரிய நதிகளை இணைக்க 87 பில்லியன் டாலர் செலவில் சுமார் 5.5 லட்சம் கோடி செலவில் திட்டம் ஒன்றை துவக்க திட்ட மிட்டுள்ளதாகவும் அதற்கான ஆய்வு பணி இந்த மாத இறுதியில் துவங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. முதல் கட்டமாக பா.ஜ., ஆளும் பமாநிலங்களான உ.பி.,ம.பி., மாநிலங்களில் பாயும் நதிகளை இணைக்க ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
நதிகள் இணைப்பதால் சுற்றுச்சூழல் அதிகளவில் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் முன்னாள் அரச குடும்பத்தினரின் எதிர்ப்பு , புலி ஆர்வலர்களின் எதிர்ப்பு உட்பட பல்வேறு எதிர்ப்புகளை மீறி திட்டம் நிறைவேற்றப்பட்டால் ஆயிரக்கணக்கான மொகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என கூறப்படுகிறது