மத்திய அமைச்சர்கள் திடீர் ராஜினாமா; அமைச்சரவையில் மாற்றமா?
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெ ளியான நிலையில், ஐந்து அமைச்சர்கள் நேற்று(ஆக., 31) ராஜினாமா செய்தனர்.
மத்திய அமைச்சரவையை பிரதமர் நரேந்திர மோடி, மாற்றியமைக்க முடிவு செய்துள்ளார். சீனாவுக்குபிரதமர் மோடி, செப்., 3ல் செல்கிறார். அதற்கு முன், மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய திறன் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி, தன்பதவியை, நேற்று இரவு ராஜினாமா செய்தார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சராக இருந்த பாண்டே, உத்தர பிரதேச மாநில பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மத்திய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி, சிறு மற்றும் குறுந்தொழில்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா, விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்,சுகாதாரத்துறை இணை அமைச்சர் குலாஸ்தே, வர்த்தகத்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன். மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் பல்யான்ஆகியோரும், ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தன் உடல் நிலை காரணமாக, பதவியை ராஜினாமா செய்ய, உமா பாரதி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.