வருமான வரி தாக்கல் செய்யவில்லையா கவலை வேண்டாம்.. அக்டோபர் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு!
வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு ஓர் நற்செய்தி. மத்திய அரசு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியினை அக்டோபர் 31 வரை நீட்டித்துள்ளது. வருமான வரி தாக்கல் செய்யும் போது 12 இலக்க ஆதார் எண் அல்லது ஆதார் விண்ணப்பம் செய்ததற்கான எண்ணை உள்ளிட வேண்டும்.
2016-2017 நிதி ஆண்டு மற்றும் 2017-2018/ நிதி ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளதால் https://incometaxindiaefiling.gov.in இணையதளத்தில் பதிவு செய்து எளிதாகத் தாக்கல் செய்துவிடலாம்.
மாத சம்பளம் வாங்கும் தனிநபரின் வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகம் இருக்கும் போது ஐடிஆர் 1 அல்லது ஐடிஆர் 4 படிவங்களை வருமான வரித் துறையினை இணையதளத்தில் பூர்த்திச் செய்து வரி தாக்கல் செய்யலாம்.