அசல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க அவசியமில்லை: ஐகோர்ட் கருத்து
சென்னை: வாகன ஒட்டிகள் அசல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என சென்னை ஐகோர்ட் நீதிபதி துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
வாகன ஓட்டிகள் இன்று முதல் அசல் டிரைவிங் லைசென்சுகள் வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு பலர் எததிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி, அசல் டிரைவிங் லைசென்ஸ் அவசியம் என கூறியிருந்தார்.
இந்நிலையில், லாரி சம்மேளன சங்கம் சார்பில் அசல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்னர். இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்னர் விசாரணைக்குவந்தது அப்போது நீதிபதி கூறுகையில், வாகன ஓட்டிகள் அசல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்த உத்தரவு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். மோட்டார் வாகன சட்டம் 139ன்படி அசல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என கூறினார்.