விளையாட்டுவீரர்களுக்கு விருது வழங்கினார் ஜனாதிபதி
கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர், ஜஸ்பிர் சிங் (கபடி), சாகேத் மைனேனி (டென்னிஸ்), அந்தோணி அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்) உள்ளிட்டோர் 'அர்ஜுனா' விருது பெற்றனர்.
விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் நட்சத்திரங்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான ராஜிவ் கேல் ரத்னா, அர்ஜுனா விருது பரிந்துரை பட்டியலை (மொத்தம் 29 பேர்) முன்னாள் நீதிபதி சி.கே.தாக்கர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்தது. தேசிய விளையாட்டு தினமான இன்று (29-08-2017), டில்லி ஜனாதிபதி மாளிகையில் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த, விளையாட்டு நட்சத்திரங்களுக்கு விருது வழங்கினார்.
முதலில் 'கேல் ரத்னா':நாட்டின் உயரிய விளையாட்டு விருதான 'கேல் ரத்னா', தேவேந்திர ஜஹாரியா (பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம்), ஹாக்கி அணி முன்னாள் கேப்டன் சர்தார் சிங்கிற்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு பதக்கம், சான்றிதழுடன் ரூ. 7.5 லட்சம் பரிசு கிடைத்தது. சிறந்த பயிற்சியாளருக்கான துரோணாச்சார்யா விருதுக்கு, காந்தி (தடகளம்), ரோஷன் லால் (மல்யுத்தம்) உள்ளிட்ட 5 பேருக்கு வழங்கப்பட்டது. இவர்களுக்கு துரோணாச்சார்யா சிலை, சான்றிதழ் மற்றும் ரூ. 5 லட்சம் பரிசு தரப்பட்டது.
மாரியப்பன் 'அர்ஜுனா':
'அர்ஜுனா' விருதுக்கு 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ரியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழகத்தின் மாரியப்பன், இந்த விருது பெற்றார்.உலக கோப்பை பெண்கள் கிரிக்கெட்டில் அசத்திய ஹர்மன்பிரீத் கவுர், ஹர்மன்பிரீத் கவுர் (கிரிக்கெட்), சாகித் மைனேனி (டென்னிஸ்), தேவேந்திரோ சிங் (குத்துச்சண்டை), சுனில் (ஹாக்கி), அந்தோனி அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்), வருண் (பாராலிம்பிக்) உள்ளிட்டோர் 'அர்ஜுனா' விருது பெற்றனர்.இவர்களுக்கு 'அர்ஜுனா' சிலை, சான்றிதழ் மற்றும் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா, கவுன்டி போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து சென்றதால், இவ்விழாவுக்கு வரவில்லை.வாழ்நாள் சாதனையாளருக்கான தயான் சந்த் விருது, புபேந்தர் சிங் (தடகளம்), சையது ஷாகித் ஹக்கிம் (கால்பந்து), சுமராய் தீதேவுக்கு (ஹாக்கி) தரப்பட்டது. இவர்களுக்கு தயான்சந்த் சிலை, சான்றிதழ் மற்றும் ரூ. 5 லட்சம் பரிசு தரப்பட்டது.
விருது பெற்றோர் முழு விவரம்:
அர்ஜூனா விருது
1. மாரியப்பன் (பாரா லிம்பிக் வீரர்)
2. வி.ஜே.சுரேக்கா (வில்வித்தை வீராங்கனை)
3. குஷ்பீர் கவுர் (தடகள வீராங்கனை)
4. ஆரோக்யா ராஜிவ் (தடகள வீரர்)
5. பிரசாந்தி சிங் ( கூடைப் பந்து வீராங்கனை)
6. லஷ்ராம் திபேந்ரோ சிங் (குத்துச் சண்டை வீரர்)
7. சீட்டேஷ்வர் புஜாரா ( கிரிக்கெட் வீரர்)
8. ஹர்மன்ப்ரித் கவுர் (கிரிக்கெட் வீராங்கனை)
9. ஒய்னாம்பீம்பீம் தேவி (கால்பந்து வீராங்கனை)
10. சௌராஷ்யா (கோல்ப் வீரர்)
11. ஜஸ்வீர் சிங் (கபடி வீரர்)
12. சுனில் (ஹாக்கி வீரர்)
13. பிரகாஷ் (துப்பாக்கி சுடும் வீரர்)
14. அமல்ராஜ் (டேபிள் டென்னிஸ்)
15 சத்யவர்த்காடியன் (மல்யுத்த வீரர்)
16. வருண் சிங் பாடி ( பாரா லிம்பிக் வீரர்)
ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது:
1.தேவந்திரா (பாரா லிம்பிக் வீரர்)
2. சர்தார் சிங் (ஹாக்கி)
துரோணாச்சார்யா விருது:
1. காந்தி (தடகளப் போட்டி)
2. ரோஷன் லால் (மல்யுத்தம் )
3. பிரசாத் (பாட்மின்டன்)
4. பிரிஜ் புஷன் மோகன்டி (குத்துச்சண்டை)
5. ரப்பில் (ஹாக்கி)
6. சஞ்சய் சக்ரவர்த்தி (துப்பாக்கிச் சூடு)
தயன் சந்த் விருது :
1. பூபேந்தர் சிங் (தடகள வீரர்)
2. செய்யது சாஹித் ஹாகிம் (கால்பந்து வீரர்)
3. சுமாரை டிடி (ஹாக்கி வீராங்கனை)