பள்ளிகல்வித்துறைக்கு புதிய முதன்மைச் செயலர் நியமனம் மற்றும ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
தமிழக பள்ளிகல்வித்துறையின் செயலராக உதயசந்திரன் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், புதிய முதன்மைச் செயலராக பிரதீப் யாதவ் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.
தமிழகத்தின் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் அவரை நியமித்து உத்தரவிட்டார்.
தமிழக பள்ளிகல்வித்துறையில் இதுவரை செயலர் என்ற பொறுப்பு மட்டுமே இருந்து வந்தது. இந்த நிலையில், புதிதாக முதன்மைச் செயலர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டது.
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையராக இருந்த பிரதீப் யாதவ் தற்போது தமிழக பள்ளிகல்வித்துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை பள்ளிகல்வித்துறை செயலராக இருந்த உதயசந்திரன், பாடதிட்டத்துக்கு மட்டும் பொறுப்பு வகிப்பார். மேலும், முதன்மைச் செயலர் பிரதீப் யாதவின் கீழ் செயல்படுவார் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பணியிடம்மா ற்றப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் விவரம்
1. பிரதீப் யாதவ்- பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் (கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலர்)
2. த. உதயச்சந்திரன்- பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராகப் பணியைத் தொடர்வார்-- பாடத் திட்ட மாற்றம் தொடர்பான பணிகளைக் கையாள்வார். இவர் முதன்மைச் செயலாளரான பிரதீப் யாதவின் முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் பணிபுரிவார்.
3. ராஜேந்திரகுமார்- தொழில் மற்றும் வர்த்தகத் துறை ஆணையாளர் மற்றும் இயக்குநர் (எல்காட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்).
4. குமார் ஜயந்த்- கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலர் (தாட்கோ நிர்வாக இயக்குநர்).
5. எஸ்.பழனிசாமி- பேரூராட்சிகள் இயக்குநர் (கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை துணைச் செயலாளர்).
6. கே.கோபால்- கால்நடை, பால் மற்றும் மீன் வளத்துறை முதன்மைச் செயலாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர்)
7. அசோக் டோங்ரே- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை முதன்மைச் செயலாளர் (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர்).
8. ராஜேந்திர ரத்னு- பேரிடர் மேலாண்மை ஆணையாளர் (பூம்புகார் கப்பல் கழக நிர்வாக இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர்- பொறுப்பு).
9. ஆர்.பழனிசாமி- கனிம வளங்கள் துறை ஆணையராக உள்ள இவர் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனிப்பார்.
10. ரோகிணி. ஆர் பாஜிபாஹரே- சேலம் மாவட்ட ஆட்சியர் (கூடுதல் ஆட்சியர், மதுரை).
11. வி.சம்பத்- சமூக பாதுகாப்பு திட்டங்கள் துறை இயக்குநர் (சேலம் மாவட்ட ஆட்சியர்).
12. ஜி.லதா- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை நிர்வாக இயக்குநர்)
13. எஸ்.மலர்விழி- உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை துணைச் செயலாளர் (சிவகங்கை மாவட்ட ஆட்சியர்).
14. பிரசாந்த் எம்.வாட்னரே- கடலூர் மாவட்ட ஆட்சியர் (திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்).
15. டி.பி.ராஜேஷ்- தொழில் மற்றும் வணிகத்துறை கூடுதல் ஆணையாளர் (கடலூர் மாவட்ட ஆட்சியர்).
16. கே.எஸ்.கந்தசாமி- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் (பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர்- கல்வி).
17. ஆர்.சுடலைக்கண்ணன்- எல்காட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (காதி மற்றும் கிராம தொழில்கள் துறை முதன்மைச் செயல் அலுவலர்).
18. எம்.சுதா தேவி- தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் (சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் துறை இயக்குநர்).
19. ரீட்டா ஹரீஷ் தாக்கர்- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் (தொழில் மற்றும் வணிகத் துறை கூடுதல் ஆணையர்).
20. பி. அண்ணாமலை- பூம்புகார் கப்பல் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை முதன்மைச் செயலர்).