கதவை தட்டாமலே அடுத்தவர் வீட்டுக்குள் நுழைவதற்கு சமம்.. ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் சம்மட்டி அடி
கதவை தட்டாமலே அடுத்தவர் வீட்டுக்குள் நுழைவதற்கு சமம்.. ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட் சம்மட்டி அடி
ஆதார் என்பது வீட்டில் கதவை தட்டாமலேயே தொழில்நுட்பம் அவர்களது வீட்டுக்கு சென்று விட்டது என்பதன் அடையாளம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆதார் அடையாள அட்டையை அரசு சேவைகளுக்கு கட்டாயமாக்குவது தனிப்பட்ட உரிமையை மீறும் செயல் என்ற வழக்கை விசாரித்த 9 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது. அந்தரங்க உரிமை என்பது அரசியல் சாசனத்தில் கூறியுள்ளபடி அடிப்படை உரிமைதான் என்று இந்த பெஞ்ச் அதிரடி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ள முக்கிய அம்சம் இது:
ஒருவர் தனது வீட்டுக்குள் யாரை அனுமதிக்க வேண்டும் என்பது அவரது உரிமை. அவருடைய வீட்டில் ஒருவரை அனுமதித்தால், அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது.
யார் வீட்டுக்குள் வர வேண்டும் என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை. ஒரு வீட்டில் அந்தரங்கம் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய அம்சம். அதுதான் அவரது மாண்பை காக்கும். இது உடல் ரீதியாக மட்டுமல்ல டெக்னாலஜி ரீதியாகவும் பொருந்தக்கூடியது.
யாருடன் வாழ்கிறார், யாருடன் வாழ வேண்டும் என்பது தனிப்பட்ட நபர் விஷயம். அதில் டெக்னாலஜி என்ற பெயரில் பிறர் தலையிட்டு உளவு பார்ப்பது மாண்பை குலைக்கும் செயல்.
குடும்பம், திருமணம், பாலியல் சார்பு போன்ற குடும்பம் சார்ந்த அந்தரங்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இவையெல்லாம்தான் தனி நபர் மாண்பை காப்பாற்ற உதவும்.