பிளஸ் 2 துணைத் தேர்விற்கு ஆன் லைனில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்
செப்டம்பர் மற்றும் அக்டோபர்-2017ல் நடைபெற உள்ள பிளஸ் 2 துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2017ல் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுத தகுதியுள்ள தனித்தேர்வர்களிடம் இருந்து ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
அரசு தேர்வுதுறையால் நடத்தப்பட்ட பிளஸ் 2 தேர்வெழுதியோர், தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம். (எச். வகையினர்)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று, இரண்டு ஆண்டு இடைவெளியும், 01.10.2017 அன்று பதிநான்கரை வய தும் பூர்த்தி அடைந்தவர் கள் நேரடி தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம்
(எச்.பி., வகையினர்)
தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்காக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், ஆண், பெண் இருபாலாருக்கும், தனித்தனியே அரசு தேர்வுத்துறை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் சிறப்பு சேவை மையங்களுக்கு, வரும் 24ம் தேதி முதல் 31 வரை, (25 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் தவிர்த்து) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை, உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து ஆன்-லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் தனி யார் கணினி மையம் மூலம் விண்ணப்பிக்க இயலாது. இம்மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையத்தின் மூலம் மட்டுமே ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புவோர், மறுமுறை தேர்வெழுதுவோர் (எச் வகை தனித்தேர்வர்கள்) ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.50 வீதம் தேர்வுக் கட்டணமும், இதர கட்டணம் ரூ.35 மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 ம் பணமாக செலுத்த வேண்டும்.
நேரடித் தேர்வர்கள் (எச்.பி வகை தனித்தேர்வர்கள்) அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து ரூ.150 தேர்வுக் கட்டணமும், இதர கட்டணம் ரூ.35, கேட்டல் மற்றும் பேசுதல் திறன் தேர்வு கட்டணம் ரூ.2 மற்றும் ஆன்-லைன் பதிவுக் கட்டணம் ரூ.50ம் பணமாக செலுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு: பார்வையற் றோருக்கு மேற்குறிப்பிட்ட தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள், டிஸ்லெக்சியா, நரம்பியல் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் தேர்வெழுதும் போது, சொல்வதை எழுதுபவர், கூடுதல் ஒரு மணி நேரம் ஆகிய குறிப்பிட்ட சலுகைகள் பெற விரும்பினால் உரிய மருத்துவ கடிதத்தை, தமது விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டினை, பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணைக் கொண்டே தேர்வு தொடர் புடைய அனைத்து தொடர் செயல்களையும் மேற்கொள்ள இயலும்.