மருத்துவ படிப்பு தரவரிசை பட்டியல் வெளியீடு
மருத்துவ படிப்புகளுக்கான தரி வரிசைப்பட்டியலை, சென்னையில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார். நீட் தேர்வு அடிப்படையில் கவுன்சிலிங்கை உடனடியாக நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து நாளை கவுன்சிலிங் துவங்க உள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு அடிப்படையில் இன்று வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் ஓசூரை சேர்ந்த மாணவர் சந்தோஷ் என்பவர், 656 மதிப்பெண்களுடன் தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
முகேஷ் கண்ணா 655 மதிப்பெண்களுடன் 2வது இடத்தையும், சையத் ஹபீஸ் 645 மதிப்பெண்களுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளார்.
ஏற்பாடுகள்:
சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கவுன்சிலிங் நாளை துவங்குவதால் தொலைபேசி மூலம் அழைக்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எந்த இடையூறும் இல்லாமல் கவுன்சிலிங் நடக்கும். சுயநிதி கல்லூரிகள், நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் கவுன்சிலிங் நடக்கும்.
மாநில பாட திட்டத்தில் படித்து விண்ணப்பித்த மாணவர்கள்: 27,488.
சிபிஎஸ்இ பாட திட்டத்தில் படித்து விண்ணப்பித்த மாணவர்கள்: 3,418 .
கடந்த ஆண்டுகளில் படித்து தற்போது விண்ணப்பித்தவர்கள்: 5,636 இவ்வாறு அவர் கூறினார்.
தரவரிசையில் பட்டியல் முதல் 20 இடங்களை பிடித்த மாணவர்கள் விவரம்
1.சந்தோஷ்கிருஷ்ணகிரி
2 முகேஷ் கண்ணா கோவை
3 சையத் ஹபீஸ் திருச்சி
4. ஐஸ்வர்யா சீனிவாசன் சென்னை
5 ஜீவா சென்னை அடையாறு
6. தினேஷ் வேலூர்
7 கபிலன் தர்மபுரி
8 ஜொகனாமேரி ராய்
9 அஸ்வின் தூத்துக்குடி
10 ஆனந்தராஜ்குமார் நாகர்கோயில்
11ராஜராஜன் சென்னை
12 அனிஸ்வர மெரின் சென்னை
13 ஆன்ஸ்டன் ஜெரால்ட் கேரளா
14 அரவிந்த் தாராபுரம்
15 எபனேசர் திண்டுக்கல்
16 அஸ்வத் தீபக் மதுரை
17 உஸ்தம்சீர் சென்னை
18 மதுசூதனன்
19 அருள் குமார் காயத்ரி