ஆய்வக உதவியாளர் பணி.. தேர்ந்தெடுக்கப்படும் விவரம் வெளியீடு!
ஆய்வக உதவியாளர் பணயிடம் தேர்ந்தெடுக்கும் விதம் பற்றிய விவரம் வெளியீடு!
ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான பணி நியமனங்கள் மாவட்டவாரியாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் செயல்படுத்தப்படும்
அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலுள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு 31.05.2015 அன்று நடைபெற்றது. அதற்கான முடிவுகள் நேற்று 24.03.2017 இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கேற்ப 1:5 என்ற விகிதப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் வெளியிடப்படும். இந்தப்பட்டியல் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், இனசுழற்சி மற்றும் விண்ணப்பதாரர்கள் அளித்திருந்த தகவல்களைப் பொறுத்து தயார் செய்யப்படும்
சான்றிதழ் சரிப்பார்ப்பு மையங்கள் ஆய்வக உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு 09.04.207, 10.04.2017, 11.04.2017 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் அறிவிக்கப்படும் மையங்களில் வைத்து நடைபெறும். சான்றிதழ் சரிப்பார்ப்பில் விண்ணப்பப்படிவத்தில் தெரிவித்திருந்த தகவல் பற்றிய அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
வெயிட்டேஜ் மதிப்பெண்கள்
சென்னை உயர்நீதி மன்றம் நீதிப்பேராண்மை எண்15438 முதல் 15440/2015 முடிய மற்றும் 15394 முதல் 15396/2015 வரையிலான வழக்குகளில் வழங்கிய இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 42 மற்றும் பள்ளிக்கல்வித்துறை நாள் 06.03.2017ல் தெரிவிக்கப்பட்ட நெறிமுறைகளின் படி சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படும்
மதிப்பெண்கள் கணக்கிடும் முறை
எழுத்துத் தேர்வு - 150 மதிப்பெண்கள்,
சான்றிதழ் அடிப்படையிலான மதிப்பீடு,
வேலைவாய்ப்பக பதிவு மூப்பு - 10 மதிப்பெண்கள்,
வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு அதற்கேற்ப மதிப்பெண் அளிக்கப்படும்.
1 ஆண்டு முதல் 2 ஆண்டு முடிய காத்திருப்பவர்களுக்கு - 2 மதிப்பெண்கள்,
2 ஆண்டு முதல் 4 ஆண்டு முடிய காத்திருப்பவர்களுக்கு - 4 மதிப்பெண்கள்,
4 ஆண்டு முதல் 6 ஆண்டு முடிய காத்திருப்பவர்களுக்கு - 6 மதிப்பெண்கள்,
6 ஆண்டு முதல் 8 ஆண்டு முடிய காத்திருப்பவர்களுக்கு - 8 மதிப்பெண்கள்,
ஆண்டு அல்லது அதற்கு மேல் காத்திருப்பவர்களுக்கு - 10 மதிப்பெண்கள்,
கூடுதல் கல்வித் தகுதி - 5 மதிப்பெண்கள்,
மேல்நிலைக் கல்வித் தேர்ச்சி (+2) - 2 மதிப்பெண்கள்,
இளங்கலைப் பட்டம் அதற்கு மேலும் - 3 மதிப்பெண்கள்,
முன் அனுபவம் (ஆய்வக உதவியாளராக) - 2 மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
மொத்த மதிப்பெண்கள் - 167
பணி அனுபவம் இப்பணி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாளான 6.5.2015 வரை தகுதியுள்ள வேலைவாய்ப்பு பதிவு முன்னுரிமை, உயர் கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவை மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள்
பணி அனுபவக் காலம் ஆய்வக உதவியாளர் பணி முன்அனுபவத்தைப் பொறுத்த வரையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரிந்தவர்கள் மட்டும் கருத்திற் கொள்ளப்படுவார்கள். மேலும் 6.05.2015 வரையிலான பணிக்காலம் மட்டுமே கருத்திற் கொள்ளப்படும்.
அனுபவச் சான்றிதழ் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்திருப்பின் மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் தொடர்புடைய மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரிடம் மேலொப்பம் பெற்று சமர்ப்பிக்கப்படும் பணி அனுபவச் சான்றிதழ்கள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்
மெரிட் லிஸ்ட் சான்றிதழ் சரிப்பார்ப்பிற்கு பின் எழுத்துத் தேர்வு மதிப்பெண் மற்றும் சான்றிதழ் சரிப் பார்ப்பின் மூலம் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து மெரிட் லிஸ்ட் தயார்செய்யப்படும். மெரிட் லிஸ்ட் அடிப்படையில் இனசுழற்சி மற்றும் இதர உள் இட ஒதுக்கீட்டின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் பட்டியலும் உடனடியான வெளியிடப்படும்
பணி நியமனம் ஆய்வக உதவி பணியாளர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரால் வெளிப்படையான கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படும்.