ARCHITECT (B.Arch) ஆக எழுதுங்கள் " NATA " நுழைவுத் தேர்வு
ஆர்கிடெக்ட் ஆக எழுதுங்கள் ‘நாட்டா’
கட்டடக்கலையை முறைப்படி பயின்று, காலத்திற்கு ஏற்ப கலைநயமிக்க கட்டடங்களை வடிவமைக்க வேண்டும் என்பதில், நீங்கள் ஆர்வம் கொண்டவரா? உங்களது பதில் ‘ஆம்’ எனில், உங்களுக்கான நுழைவுத்தேர்வே நாட்டா!
கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர் சார்பில், ஐந்து ஆண்டுகள் கொண்ட பி.ஆர்க்., பட்டப் படிப்பில் சேர்வதற்கான அகில இந்திய நுழைவுத்தேர்வே, ‘நாட்டா’ எனப்படும் நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்க்கிடெக்சர்!
சேர்க்கை முறை
‘நாட்டா’ தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் பிளஸ் 2 அல்லது டிப்ளமோ படிப்பில் பெற்ற மதிப்பெண்களை மதிப்பீடு செய்து கலந்தாய்வு மூலம் நாடு முழுவதிலும் உள்ள பி.ஆர்க்., இடங்கள் நிரப்பப்படுகின்றன. அதன்படியே, தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கும் கலந்தாய்வின் மூலம் சேர்க்கை நடைபெறுகிறது.
யார் எழுதலாம்?
பிளஸ் 2வில் கணிதப் பாடத்தை முதன்மை பாடமாக பயின்று, அதில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு டிப்ளமோ பட்டயப்படிப்பில் கணிதத்தை ஒரு பாடமாகா பயின்று 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். தற்போது பிளஸ் 2 படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். லேட்டரல் என்ட்ரி மூலம் பி.ஆர்க்., பட்டப்படிப்பைத் தொடர முடியாது என்பதை மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
தேர்வு முறை
கணிதம் மற்றும் பொது திறனறிவு பிரிவு: ‘மல்டிபில் சாய்ஸ்’ வடிவில், ஒரு கேள்விக்கு இரண்டு மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், 120 மதிப்பெண்களுக்கு, 60 கேள்விகள் கேட்கப்படும்.
டிராயிங் டெஸ்ட்: கொடுக்கப்பட்ட பொருளை வரையும் திறன், முப்பரிமாணம் மற்றும் இரு பரிமாணப் படங்கள் வரைதல், வண்ணங்களைப் பயன்படுத்துதல், ஒளி நிழலின் தாக்கத்துடன் வரைதல், அளவுகளைப் புரிந்துகொள்ளல் போன்ற பிரிவுகளில் மாணவர்களின் ஓவியத் திறன்கள் ஆராயப்படுகிறது. இப்பிரிவில் கேள்விக்கு தலா 20 மதிப்பெண்கள் வீதம், 40 மதிப்பெண்களுக்கு இரண்டு கேள்விகள் கேட்கப்படும்.
மூன்று பிரிவையும் சேர்த்து மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. மாணவர்களின் விடைத்தாள்களை மூன்று பேர் அடங்கிய குழு தனித்தனியே மதிப்பீடு செய்து மதிப்பெண்களை வழங்குவதால் இந்நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் நன்கு திறன்பட பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம்.
தேர்வு நாள்: ஏப்ரல் 16
விண்ணப்பிக்கும் முறை: www.nata.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 11
Exam Centres in Tamilnadu : CHENNAI, COIMBATURE, MADURAI
Application Fee
"NATA 2017" To pay Application fee INR 1250/-
(Rupees one thousand two hundred fifty only) as application fee, through ONLINE mode.
Service charges, as applicable, would be payable along with fees at the bank.
விபரங்களுக்கு: www.nata.nic.in