புதிய குடும்ப அட்டை (Ration Card) இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை
புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பத்தை பின்வரும் வழிமுறைகள் மூலம் பூர்த்தி செய்யவும்
புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்க, கீழே உள்ள "புதிய அட்டை விண்ணப்பிக்க" பொத்தானை கிளிக் செய்யவும்
1.விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், மற்றும் முகவரியை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளிடவும்
2.மாவட்டம், வட்டம் மற்றும் கிராமப் பெயர்களை அந்தந்த கீழ் வரிப் பட்டியலில் இருந்து தேர்வு செய்யவும்
குடும்ப தலைவரின் படத்தைப் பதிவேற்றம் செய்வதற்கு, "Choose File" பொத்தானை அழுத்தவும்.பொத்தானை அழுத்தி குடும்ப தலைவர் படத்தைத் கணினியிலிருந்து தேர்வு செய்த பின்னர் "பதிவேற்று" பொத்தானை அழுத்தவும். (பதிவேற்றம் செய்யும் படம் .png .gif .jpg வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் படத்தின் அளவு 2 மெகாபைட்ஸ் (MB) இருக்க வேண்டும்.குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர் விவரங்களைச் சேர்ப்பதற்கு, "உறுப்பினரை சேர்க்க" பொத்தானை அழுத்தவும்.
3.முதலில் குடும்ப தலைவரின் விவரங்களை உள்ளீடு செய்யவும்.
பிறகு உறுப்பினர் விவரங்களை உள்ளிடவும் (பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், பிறந்த தேதி, பாலினம், தேசிய இனம், உறவுமுறை, தொழில், மாத வருமானம் (ருபாயில்), வாக்காளர் அட்டை எண் மற்றும் ஆதார் எண்)
இணைக்கப்படவுள்ள ஆவணங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு, "Choose File" பொத்தானை அழுத்தி கணினியிலிருந்து ஆவணத்தைத் தேர்வு செய்த பின்னர் பதிவேற்று பொத்தானை அழுத்தவும். குடியிருப்புச் சான்றைத் தேர்வு செய்த பின்னர் அதைப் பதிவேற்றம் செய்வதற்கு, "Choose File" பொத்தானை அழுத்தவும் பொத்தானை அழுத்தி கணினியிலிருந்து ஆவணத்தைத் தேர்வு செய்து "பதிவேற்று" பொத்தானை அழுத்தவும்
பதிவேற்றம் செய்யும் குடியிருப்புச் சான்று .pdf .doc .docx வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் ஆவணத்தின் அளவு 2 மெகாபைட்ஸ் (MB) இருக்க வேண்டும். குடியிருப்புச் சான்றுக்கான ஆவணத்தைத் தேர்வு செய்யவும் (மின்சாரக் கட்டணம், தொலைபேசி கட்டணம், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் முன் பக்கம், சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி, குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு ஆணை)
பொத்தானை அழுத்தி கணினியிலிருந்து ஆவணத்தைத் தேர்வு செய்து "பதிவேற்று" பொத்தானை அழுத்தவும்
பதிவேற்றம் செய்யும் குடியிருப்புச் சான்று .pdf .doc .docx வடிவத்தில் இருக்க வேண்டும் மற்றும் ஆவணத்தின் அளவு 2 மெகாபைட்ஸ் (MB) இருக்க வேண்டும்
4.குடும்ப அட்டை வகையை தேர்வு செய்யவும் (AAY அட்டை, நீல அட்டை (B), பச்சை அட்டை (G), போலீஸ் அட்டை (K), LOF AAY அட்டை, LOF பச்சை அட்டை,LOF நீல அட்டை, பொருட்களில்லை அட்டை (N), சிறை அட்டை (P), சர்க்கரை அட்டை (S) மற்றும் தட்கல் (Tatkal) அட்டை)
5.ஏற்கனவே எரிவாயு இணைப்பு பெறப்பட்டிருந்தால், சரிகுறிப் பெட்டியைக் கிளிக் செய்யவும்
எரிவாயு இணைப்பு பற்றிய கீழ்கண்ட விவரங்களை அளிக்கவும்:
a.எரிவாயு இணைப்புக்குரிய நபரின் பெயரைத் தேர்வு செய்யவும்
b.எண்ணெய் நிறுவனத்தின் பெயரைத் தேர்வு செய்யவும்
c.எல்.பி.ஜி நுகர்வோர் எண்ணை உள்ளிடவும்
d.எரிவாயு நிறுவனத்தின் பெயரை உள்ளிடவும்
e.சிலிண்டர் எண்ணிக்கை தேர்வு செய்யவும்
குறிப்பு: குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்கும் நபரிடம், இரண்டு எரிவாயு இணைப்பு இருந்தால், அந்த விவரங்களை உள்ளிடவும்.
உள்ளிட்ட விவரங்களை ஒப்புக்கொள்ள, சான்றிதழ் பகுதியில் உள்ள சரிகுறிப் பெட்டியைக் கிளிக் செய்யவும்
உள்ளிட்ட விவரங்களை சமர்பிக்க, விண்ணப்பத்தில் உள்ள பதிவு செய்ய பொத்தானை கிளிக் செய்யவும்
விண்ணப்பத்தை பதிவு செய்ய பின்னர், உங்களுக்கு ஒரு குறிப்பு எண் அனுப்பப்படும். அந்தஎண்ணின் மூலம் ரேஷன் கார்டு நிலவரத்தை அறியலாம். இந்த திட்டம் தீபாவளி முதல் அமலுக்கு வரவுள்ளது.
புதிய அட்டை விண்ணப்பிக்க இங்கே click செய்யவும்