வருகிறது புதிய கல்விக் கொள்கை: மத்திய மனித வள அமைச்சகத்திடம் பரிந்துரை...!!
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தனது பரிந்துரைகளை மத்திய மனித வள அமைச்சகத்திடம் டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் குழு அளித்துள்ளது. புதிய கல்விக் கொள்கையை உருவாக்க டி.எஸ்.ஆர். சுப்பிரமணியம் தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைந்தது. இதைத் தொடர்ந்து இந்தக் குழு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி வந்தது. இந்தப் பணி நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து தனது பரிந்துரைகளை மத்திய மனித வள அமைச்சகத்திடம் சமீபத்தில் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக குழு, ஆலோசனைகளை கேட்டிருந்தது. இதையடுத்து 29 ஆயிரம் கருத்துகள் ஆன்-லைனில் குழுவுக்கு வந்தன. இதுதொடர்பாக பல்வேறு நபர்கள், கல்வியாளர்கள், கல்வி நிறுவனத் தலைவர்களிடம் குழு ஆலோசனை நடத்தியது. இதைத் தொடர்ந்து குழு கொள்கையை உருவாக்கி பரிந்துரைகளை அளித்துள்ளது. மேலும் கிழக்கு, மத்திய, வடகிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு மண்டலங்களிலும் ஆலோசனைக் கூட்டத்தை குழு நடத்தியது.