உலக சிட்டுக்குருவிகள் தினம் மார்ச் 20 : ஆனால் குருவிகள் எங்கே?
உலக சிட்டுக்குருவிகள் தினத்தை முன்னிட்டு செல்போன் நிறுவனங்கள் தங்களது டவரை உயர்த்த நிறுவப்படும் ஒவ்வொரு செல்போன் கோபுரங்களுக்கு சுமார் 10 மரங்களை நட்டால் மட்டுமே குருவிகள் மற்றும் பறவைகளை காக்க முடியும் என சமூக நல ஆர்வலர்கள் வர்த்தகர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடைசியில் காட்சி படுத்தப்பட்ட பொருளாக போட்டாவில் மட்டும், புத்தகத்தில் மட்டுமே சிட்டுக்குருவிகளை பார்க்க முடியுமாம் போலிருக்கிறது
உலக அளவில் உலக இரத்ததான தினம், உலக சிறுநீரக தினம் அவ்வப்போது அந்த தினத்தை பல்வேறு கட்சியினரும், பல்வேறு சமூக நல ஆர்வலர்களும் அனுசரித்து கொண்டாடி வருகின்றனர். அந்த நாளில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சூளுரைகளை உலகிற்கு உணர்த்தி சபதம் எடுப்பது மக்களின் இயல்பாகும்.
இந்நிலையில் நாளை (20-03-16) உலக சிட்டுக்குருவிகள் தினம் உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. அதே நாளில் உலக குருவிகள் தினமும் அனுசரிக்கப்படுகிறது. தற்போது நாகரீகம் என்ற பெயரில் பேஜர் முதல் செல்போன், ஆண்ட்ராய்டு உள்ளிட்ட பல்வேறு ரக போன்கள் விற்பனை செய்யப்படுவதோடு, அதற்கு ஏர்செல், ஏர்டெல், வோடாபோன், ஐடியா, டாடா டோகாமோ, ரிலையன்ஸ், பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட பல்வேறு செல்போன் நிறுவனங்கள் அந்த செல்போன் நிறுவனங்களின் டவர்களை விரிவு படுத்த அதிக கதிர்வீச்சை கொண்ட கோபுரங்கள் ஆங்காங்கே நிறுவப்படுகிறது.
இந்த கால கட்டத்தில் தங்களது கட்டிடத்தில் பசுமை பொழிந்த தோட்டங்கள் உள்ளதோ? இல்லையோ? அவர்களது வீட்டின் மாடியில் செல்போன் டவர்கள் உள்ளன.
இந்நிலையில் ஆங்காங்கே விரிவாக்கப்படும் செல்போன் டவர்களினால் ஆங்காங்கே உள்ள மரங்கள் வெட்டப்படுவதோடு, செல்போன் டவர்கள் விரிவாக்கப்படுகிறது. இந்த செல்போன் டவர்களில் குருவிகள் மற்றும் சிட்டுக்குருவிகள் குடியிருக்காது. ஏனென்றால் கதிர்வீச்சியின் தாக்கம் அப்படி.
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நெடுஞ்சாலை விஸ்தரிப்பு செய்யும் போது நீதிமன்றமானது, சாலை விஸ்தரிக்கும் போது ஒரு மரத்தை வெட்டினால் 10 மரங்களை நடவேண்டுமென்று ஆணையிட்டது.
ஆனால் சாலையை விஸ்தரித்த இந்திய நெடுஞ்சாலை துறை ஆணையமும், தனியார் டோல் கேட் நிர்வாகமும், மரம் நட்டமாதிரி கணக்கு காண்பிக்க ஆங்காங்கே அரளி செடிகளை மட்டும் தான் நட்டது.
இந்நிலையில் செல்போன் நிறுவனங்களாவது,உலக சிட்டுக்குருவிகள் தினத்தை காக்கவும், மனிதனை இயற்கை எழில் கொஞ்சும் விதத்தில் மாற்றும் சக்தி வாய்ந்த சிட்டுக்குருவி மற்றும் குருவிகளை பாதுகாக்கவும், இனப்பெருக்கம் செய்யவும், ஒரு செல் போன் டவர் நட்டால், அருகிலேயே 10 மரங்களை நட்டு இயற்கை எழில் கொஞ்சும் மரங்களை நட்டால் குருவி இனத்தை காப்பதோடு, இனி வருங்கால சந்ததியினர் குருவி என்றால் இப்படி தான் இருக்கும் என்று காட்சிப்படுத்த பொருட்களில் இல்லாமல், புத்தகங்களிலும், புகைப்படங்களிலும் காணாமல் நேரிடையாக பார்க்க முடியும் என்று வர்த்தக சங்க நிர்வாகிகளும், சமூக நல ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்
மேலும் விலங்குகளை வதை செய்வதாக கூறி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த மத்திய அரசும் நீதிமன்றமும், பறவை இனங்களுக்கு கொஞ்சம் தயவு தாட்சணை கொடுக்கலாம்.
எது எப்படியோ, உலகெங்கிலும் உள்ள பறவைகள் வேதாரண்யம், கோடியக்கரை, வேடந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு சரணாலயத்திற்கு வந்து செல்லும் போது நமது நாட்டின் பறவைகள் நமது எல்லைக்குள்ளே அழித்து விடுவது எப்படி சாதனையாக முடியும் என்றும், ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு நாள், உலக தினத்தில் ஒரு லட்சியத்தை மேற்கொள் காட்டி வாழ வேண்டும்.
அதுபோல இந்த வரும் 20ம் தேதி உலக குருவிகள் தினத்தை முன்னிட்டு, ஒரு செல்போன் டவர் அமைப்பவர்கள் மற்றும் அந்தந்த நிறுவனங்கள் 10 மரங்கள் நட அரசே முன் நின்று உத்திரவு பிறப்பிக்க வேண்டுமென்பது சமூக நல ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
என்னதான் உலக அளவில் கரூர், திருப்பூர், கோவை ஆகிய மாநகரங்கள், நகரங்கள் பேசப்பட்டாலும், பறவைகளை பொறுத்தவரை காக்காக்கள் மட்டுமே அதிகம் உள்ளனவே தவிர, அழகு சாதனம் அதுவும் கூட்டில் மட்டுமே குருவிகளை காணும் அவல நிலை இன்றும் நம் கண்களால் காணப்படுகிறது.