வாட்ஸ் அப்பில் அறிமுகமாகிறது இரண்டு புதிய வசதிகள்
வாட்ஸ் அப் நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளது.
ஆன்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பவர்களுக்கு இந்த புதிய வசதிகள் பெறலாம். இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட 2.12.535 என்ற புதிய அப்டேட்டில் இந்த வசதிகளை பெறலாம்.
அதாவது, கூகுள் டிரைவில் நாம் சேமித்து வைத்துள்ள பி.டி.எப் ஃபைல்களை நேரடியாக வாட்ஸ் அப் மூலம் இனி நாம் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளலாம்.
அடுத்து, வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் எழுத்துக்களின் வடிவத்தை மாற்ற முடியும். அதாவது, எழுத்துக்களை சாய்வாகவும், போல்ட் செய்தும், எழுத்துக்கு கீழே கோடிடுவது மற்றும் ஆஸ்டிரிக் குறியீடுகளை எழுத்துகளின் நடுவில் சேர்ப்பது என்பது போன்ற மாற்றங்களை நாம் செய்யலாம்.
ஆனால் இந்த வசதிகள் அடங்கிய வாட்ஸ் அப்பின் புதிய வெர்ஷனை, கூகுள் பிளே ஸ்டோர் இன்னும் வெளியிடவில்லை.