தாய்மொழிக் கல்வியின் அவசியம்
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா என்கிறோம். ஆனால், பொருளாதார நிபுணர்களின் பார்வையில் அதிக மனிதவளம் கொண்ட நாடு சீனா ஆகும். விளையாட்டுப் பொருட்கள், வெடிக்கும் மத்தாப்பு, எலெக்ட்ரானிக் பொருட்கள் என அனைத்துப் பொருட்கள் தயாரிப்பிலும் மேலோங்கி நிற்கிறது சீனா. இதற்கான அடிப்படைக் காரணம், தாய்மொழி வாயிலாகக் கல்வி கற்பதுதான். மழலையர் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை அனைத்தும் தாய்மொழியில் கற்கிறார்கள். அளப்பரிய மனித வளமும் இயற்கை வளமும் கொண்ட இந்தியா, தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காததால் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. தாய்மொழிக் கல்வியினை ஊக்குவிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.