10 வயதிலேயே முறியடிக்க முடியாத சாதனை..!
சாதனைகள் என்பது சாதாரணமாக கிடைத்து விடாது. சமூகம் கொடுக்கும் தொல்லைகள், தடைகள் ஒருபக்கம் இருக்க, ஏகப்பட்ட சுயபோரட்டங்களை சந்திக்க நேரிடும், பின்புதான் சாதனை புரியும் களத்தில் கால்தடம் பதிக்க முடியும். நமக்கு என்ன வரும்.? நமக்குள் இருக்கும் திறமை இருக்கிறது என்று கண்டுபிடிக்கவே 'சர்ர்ர்'றென்று 20 வயது ஓடி விடும். ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக 10 வயதிலேயே 'தனக்கே தனக்கான' துறையில் முறியடிக்கப்பட முடியாத அளவிலான சாதனை ஒன்றை படைத்துள்ளார் 'நம்ம தம்பி, தங்க கம்பி' ரோனில் ஷா..!
ஜாவா ஸ்டாண்டர்ட் எடிஷன் 6 ப்ரோகிராமர் : பொதுவாக, பொறியியல் பட்டதாரிகள் மற்றும் தொழில்முறைகாரர்கள் மட்டுமே எழுதும் சாப்ட்வேர் டெவெலப்பர் (software developer) தேர்வுகளை எழுதுவார்கள், சற்று வித்தியாசமாக 10 வயதே பள்ளி மாணவன் ரோனில் ஷா ஜாவா ஸ்டாண்டர்ட் எடிஷன் 6 ப்ரோகிராமர் (JAVA Standard Edition 6 Programmer Certified Professional examination)என்ற தொழில்முறை பரீட்சையை எழுதியுள்ளார்.
8 நிமிடங்கள் : 2 மணி நேரம் 56 நிமிடங்கள் எழுதப்படும் அந்த ஜாவா தேர்வை வெறும் 18 நிமிடங்களில் எழுதி முடித்து மட்டுமின்றி அதில் தேர்ச்சியும் பெற்றுள்ளார் ரோனில் ஷா, ஜாவா தேர்வுகளில் இது சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது..!
100 சதவிகிதம் : முதல் முறையிலேயே ஜாவா தேர்வில் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற பெருமை மட்டுமின்றி, இந்தியாவிலேயே ஜாவாவின் இந்த தேர்ச்சி சான்றிதழை பெற்ற மிகவும் இளமையான நபர் என்ற பெருமையும் ரோனில் ஷாவிற்கே சேரும்..!
யுரோ பள்ளி : குழந்தை மேதையாக கருதப்படும் ரோனில் ஷா - அகமதாபாத்தில் உள்ள யுரோ பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவன் என்பது குறிபிடத்தக்கது.
முதலாம் வகுப்பு : ஜாவா சாம்பியனான ரோனில் ஷா தனது 4 வயதில் இருந்தே கம்ப்யூட்டர்தனை கையாள கற்றுக்கொண்டதுடன், அடிப்படைகளை கற்றப்பின் முதலாம் வகுப்பு பயிலும் போதே சொந்தமாக அனிமேஷன் (Animation), கோரல் டிரா (Coral Draw), சி (C), சி++ (C++) ஆகியவைகளை கையாள ஆரம்பித்தார்.
ராயல் டெக்னோசாப்ட் : பின்பு ஜாவா மீது தனக்கு இருக்கும் ஆர்வத்தை புரிந்து கொண்டு, ராயல் டெக்னோசாப்ட் என்ற தனியார் நிறுவதில் பயிற்சி பெற்று ஜாவா தொழில்முறை தேர்விற்காக தன்னை தயார் படுத்திக்கொண்டுள்ளார்.
தொடர் பயிற்சி : "தினம் காலை 11.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலாக தொடர் பயிற்சி செய்ததால்தான் என்னால் வெறும் 18 நிமிடங்களில் ஜாவா தேர்வை எழுதி முடிக்க முடிந்தது" என்று கூறியுள்ளார் ரோனில் ஷா..!
ரோபோடிக்ஸ் மற்றும் ஆண்ராய்டு : மேலும் வரும் நாட்களில் ரோபோடிக்ஸ், அட்வான்ஸ்டு ஜாவா மற்றும் ஆண்ராய்டு ஆகியவைகளை கற்றுத்தேற விரும்புவதாகவும் ரோனில் ஷா விருப்பம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.