பட்ஜெட்டில் வருமான வரி விலக்கின் உச்ச வரம்பு உயர்த்தப்படுமா?
மத்திய பட்ஜெட் திங்கட் கிழைமை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டிற்கு முன்னோட்டமாக பொருளாதார அய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்வது வழக்கம்.
அதன்படி தாக்கல் செய்யப்ட்டுள்ள ஆய்வறிக்கையில், மானியங்களை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் மானியங்கள் ரத்து செய்யவது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது.
மேலும், வருமான வரி விலக்கின் உச்ச வரம்பு தற்போது 2.5 லட்சமாக உள்ளது. இதை 3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், 2016–17 ஆம் நிதி ஆண்டின் பட்ஜெட்டில், வருமான வரி விலக்கின் உச்ச வரம்பில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகின்றது.
மேலும், படிப்படியாக வருமான வரி விலக்கு உச்சவரம்பு என்ற நிலையை ஒழிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.