பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிறார் காந்தி !
உங்கள் பள்ளி அல்லது கல்லூரிகள் தமிழ் பேசும் ‘காந்தி’ படம் பார்க்க வேண்டுமா? செல்பேசியில் அழையுங்கள், அஞ்சலில் ‘காந்தி’ டிவிடியில் வந்துவிடுவார்!
காந்தி நினைவு நாளன்று இப்படி ஒரு நல்ல காரியத்தைச் தொடங்கியிருக்கிறார்கள், சென்னையைச் சேர்ந்த காந்தி சர்வ சமயப் பிரார்த்தனை மையத்தினர். இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோ தயாரித்து இயக்கி, ‘ஆஸ்கர் விருது’ பெற்ற ‘காந்தி’ திரைப்படத்தின் தமிழ் வடிவத்தை டிவிடியாகப் பள்ளி - கல்லூரி களுக்குக் கட்டணம் இன்றிக் கொண்டுசேர்க்கும் பணியைக் கையில் எடுத்துக்கொண்டிருக் கிறார்கள். இந்த டிவிடியைப் பெற்றுக் கொள்பவர்கள் இரு காரியங்களைச் செய்ய வேண்டும்.
1. தங்கள் கல்வி நிலையத்தில் இந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டி, காந்தியின் வரலாற்றையும் காந்தியத்தின் இன்றைய தேவையையும் மாணவர்களுக்குச் சொல்ல வேண்டும்.
2. தாங்கள் பார்த்து முடித்த பின் இந்த டிவிடியைப் பக்கத்திலுள்ள ஏதேனும் ஒரு கல்வி நிலையத்துக்குப் பரிசளித்துவிட வேண்டும். அவர்களிடமும் இதே வாக்குறுதிகளைப் பெற வேண்டும்.
காந்தி வாழ்க்கை ஒரு வகையில், இந்திய வரலாற்றைத் தரிசிக்கும் அனுபவம். சர்வதேசப் புகழ்பெற்ற படத்தைத் தமிழில் பார்ப்பது கூடுதல் புரிதலுக்கு உதவும். ‘என்எஃப்டிசி'யும் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்கிறது.
தொடர்புகொள்ள வேண்டிய செல்பேசி எண்கள்:
9790842245, 9790906735.
மின்னஞ்சல் முகவரி:
gandhiprarthanaimaiyam@gmail.com
அஞ்சல் முகவரி:
காந்தி சர்வ சமயப் பிரார்த்தனை மையம், 8-வது பிளாக், எண் 193, முகப்பேர் கிழக்கு, சென்னை - 37.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ்