மாணவர்கள் கவுன்சிலிங் முறை: பல்கலை.களுக்கு யுஜிசி புதிய உத்தரவு!!
சென்னை: மாணவர்களுக்கு கவுன்சிலிங் முறையை அறிமுகம் செய்யுமாறு பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது. மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவர்கள் எதிர்நோக்கும் சவால்களைச் சமாளிப்பதற்காக இந்த மாணவர்கள் கவுன்சிலிங் முறையை அறிமுகம் செய்யவேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் இந்த கவுன்சிலிங் திட்டத்தில் அடங்கியிருக்கவேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. படிப்பில் ஏற்படும் பிரச்னைகள், வீட்டுக் கவலை, படிப்பினால் ஏற்படும் மன அழுத்தம், பயம் போன்றவற்றைப் போக்குவதற்கு இந்த கவுன்சிலிங் மையங்கள் உதவும். இதுகுறித்து யுஜிசி செயலர் ஜஸ்பால் சிங் சாந்து கூறியதாவது: நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் இதுதொடர்பான அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திலேயே இந்த கவுன்சிலிங் மையங்கள் அமைக்கப்படவேண்டும். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இடையே இருக்கும் பிரச்னைகளைக் களையவே இந்த கவுன்சிலிஹ் மையம் என்றார் அவர்.