டெல்லி பிரச்னைக்கு தீர்வு சொன்ன 13 வயது சிறுவன்!
டெல்லியில் காற்று மாசுபட்டு வருவதால் டெல்லி அரசு ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க விதியை அறிமுகம் செய்தது. இதன் மூலம் வாரத்தின் மூன்று நாட்களில் ஒற்றை இலக்க கார்களும், அதற்கு அடுத்த நாட்களில் இரட்டை இலக்க கார்களும் ஓடும் என அறிவித்தது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தன.
இதற்கு என்ன வழி என்பது தெரியாமல் பலர் தவித்து வந்தனர். அவர்களுக்கெல்லாம் சரியான தீர்வை நொய்டாவை சேர்ந்த 13 வயது சிறுவன் அக் ஷத் மிட்டல் ஒரு இணையதளம் மூலம் அளித்துள்ளான். அமிட்டி சர்வதேச பள்ளியில் படிக்கும் இந்த சிறுவனின் செயல், மற்ற மாணவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
http://www.odd-even.com/ என்ற இணையதளம் மூலம், ஒருவர் தான் எங்கு செல்ல வேண்டும் என்பதை பதிவு செய்தால் அதே ஒற்றை இலக்க கார் கொண்ட நபருடன், இரட்டை இலக்க கார் எண் கொண்ட நபர் காரை பகிர்ந்து கொள்ள முடியும். இதனை ஒரு முறை செல்லவோ அல்லது திரும்ப வரவோ, இரு வழி பயணத்திற்கோ தேர்ந்தெடுத்து கொள்ளலாம். கார் பூலிங் எனும் கார்களை பகிர்வது கொள்ளும் வசதி மூலம் ஒருவரது வயது, பாலினம், செல்லும் பாதை ஆகியவற்றை தேர்ந்தெடுத்து பயணத்தை அமைத்து கொள்ளும் விதமாக இந்த இணையதளத்தை வடிவமைத்துள்ளார்.