வேலூரின் ஒரு இளம் விஞ்ஞானி!
வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கி வரும் ஹோலி க்ராஸ் மெட்ரிக் மேனிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இளம் விஞ்ஞானியான ஜி. ஸ்ருதிசரஸ்வதி, கடந்த அக்டோபர் மாதம் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த 'இன்ஸ்பியர் அவார்டு' அறிவியல் கண்காட்சியில், தனது மூன்று விதமான கண்டுபிடிப்புகளை சமர்ப்பித்தார். அதனை ஆய்வு செய்த விஞ்ஞானிகளால், மாநில அளவில் முதல் மாணவியாக தேர்வுசெய்யப்பட்டு தங்கப்பதக்கம் வென்றார்.
கண்டுபிடிப்புகள் பின்வருமாறு:
1.வாகனம் செல்லும்போது உணறிகள் (Sensor) மூலமாக தானாகவே மின்சாரம் சேமிக்கும் கருவி. சாலைபகுதியில் வாகனம் அல்லது மனித நடமாட்டம் இருக்கும்போது சாலை ஓரங்களில் இருக்கும் மின்விளக்கு தானாக ஒளிரும். மாறாக எந்தவித நடமாட்டம் இல்லாதபோது ஒளிராது. இதுவே உணறிகள்(Sensor) மூலம் கட்டுப்படுத்தும் கருவி.
2. சாலை விபத்துகளை தடுக்க, சிவப்பு விளக்கு எறிந்தாலும் சில வாகனங்கள் சென்றுவிடுவதுண்டு இதனை தடுக்க, உணறிகள் (Sensor) மூலமாக தானியங்கி தடை உண்டாக்கும் கருவி சாலையில் பொருத்தப்பட்டிருக்கும். பச்சை விளக்கு ஒளிரும்போது தானாக அந்த தடை மறைந்துவிடும்.
3. அவசர ஊர்தி (Ambulance) மற்றும் தீயணைப்பு (Fire-Engine) வாகனம் செல்லும்போது, சாலையில் வைக்கப்பட்டிருக்கும் IR Transmitter (உணறிகள்) மூலமாக வாகன நெரிசல் இல்லாமல் செல்ல பச்சை விளக்கு தானாக ஒளிரும். இதனால் தடையின்றி வாகனம் செல்லும்.
மாநில அளவில் தேர்வான இளம் விஞ்ஞானிகளுக்கான ஆய்வு கூட்டம், வருகின்ற 5,6 மற்றும் 7-ம் தேதிகளில், இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள IIT வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த அறிவியல் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு, தனது கண்டுபிடிப்புகளை சமர்ப்பிக்க உள்ளார் ஸ்ருதி சரஸ்வதி.