டெங்குவை விரட்டும் தற்காப்பு முறைகள்
மழைநீர் தேங்கி அதிக தொற்று நோய்களை ஏற்படுத்தும். டெங்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தைத்தான் முதலில் தள்ளிவைக்க வேண்டும்.
நாம் வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்க விடாமல் பார்த்துக்கொள்வது, கொசுக்களை ஒழிக்கத் துளசி, நொச்சிச் செடிகளை வளர்ப்பது, மழைக் காலங்களில் காய்ச்சிய குடிநீரைப் பயன்படுத்துவது, சுகாதாரமற்ற உணவு உண்பதைத் தவிர்ப்பது போன்ற செயல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
டெங்கு
டெங்கு ஒன்றும் தீர்க்க முடியாத நோயல்ல. நோய் வராமல் தடுக்கும் தற்காப்பு முறைகளாக, நிலவேம்புக் குடிநீர் குடித்துவரலாம். இதனுடன் பப்பாளி இலை சாறு, மலைவேம்பு சாறும் பருகலாம்.
நிலவேம்பு
நிலவேம்பு குடிநீரை 30-50 மி.லி.., குடிக்க வேண்டும். கசப்பு சுவையைக் குறைக்கச் சிறிது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
பப்பாளி இலை சாறு
மருத்துவக் குணங்கள் நிறைந்த பப்பாளிப் பழங்களைப் போலவே, பப்பாளி இலைகளும் மகத்துவம் நிரம்பியவைதான்.
தயாரிக்கும் முறை
பப்பாளி இலைகளை நன்றாகக் கழுவி, மைபோல அரைத்து, சாறு பிழிந்து வடிகட்டி, சிறிதளவு பனைவெல்லம் சேர்த்து மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை 10 மி.லி. அளவு கொடுக்கலாம்.
மலைவேம்பு
மலைவெப்பிலைக்கு ஜூரம் அகற்றி, புழுக்கொல்லி, சிறுநீர் பொருக்கும் தன்மை உண்டு. பப்பாளி இலை சாறு தயாரிப்பதை போலவே இதையும் தயாரித்துக் கொள்ளலாம்.
நோய்கள் ஏற்படாமல் தடுக்க, முதலில் தூய்மையான சுற்றுசூழலை உருவாக்க முயற்ச்சிப்போம்.