இந்தியாவில் அதிகரித்துவரும் இணையதள பயன்பாடு
சர்வதேச அளவில் இணையதளங்களின் தணிக்கை (சென்சார்) மற்றும் இணையதள கண்காணிப்பு அதிகரித்துள்ள நிலையிலும், இந்தியாவில், இணையதள சுதந்திரம் 2 புள்ளிகள் அளவிற்கு அதிகரித்துள்ளது.
சுதந்திரம் மற்றும் ஜனநாயக சுதந்திர அவை என்ற அமைப்பு இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு 'Freedom On the Net 2015 என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சர்வதேச அளவில், இணையதளங்களுக்கான தணிக்கை மற்றும் கண்காணிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையி்லும், இந்தியாவில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது.
2014ம் ஆண்டில் 40 சதவீதமாக இருந்த இணையதள பயன்பாடு, 2015ம் ஆண்டில் 2 புள்ளிகள் அதிகரித்து 42 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இணையதள பயன்பாட்டில், இந்தியா சர்வதேச அளவில் மூன்றாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் சீனாவும் உள்ளன.