ஏப்ரல் 2018, நிலநடுக்கம் உறுதி : நாசா கணிப்பு..!
உலக அழிவு என்பது ஒரு நொடியில் நடந்து விடக்கூடியது அல்ல, மெல்ல மெல்ல நிகழும் ஒரு விடயம் என்பதே பெரும்பாலான விஞ்ஞானிகளின் கருத்தாகும். அதன் அடிப்படையில் பல ஆய்வுகள் உண்டு, அவைகளில் முக்கியமானது தான் எதிர்காலத்தில் நடக்கலாம் என்று கணிக்கப்படும் ஆய்வுகள், அப்படியான சமீபத்திய ஆய்வு ஒன்று நிலநடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறது. உலகம் 'இப்படித்தான்' அழியும் - விஞ்ஞானிகள் விளக்கம்..! அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வுக்கூடம் (Jet Propulsion Laboratory) அமெரிக்காவின் முக்கிய நகரமொன்றில் நில நடுக்கம் ஏற்படும் என்று கணித்துள்ளது.
ஏப்ரல் 2018 : அந்த கணிப்பின்படி வரும் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏன்ஜலஸ் (Los Angeles) நகரில் நிலநடுக்கம் ஏற்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
ரிக்டர் அளவு : அது மட்டுமின்றி அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் சுமார் 5.0 அளவில் பதிவாகும் என்றும் நாசாவால் காணிக்கப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ் மற்றும் ரேடார் : இந்த கணிப்பின் மூலம் நாசா விஞ்ஞானிகள் ஜிபிஎஸ் (GPS) மற்றும் ரேடார் (RADAR) கருவிகள் துணை கொண்டு கணிசமான நிலநடுக்கம் ஏற்படக் கூடிய முரண்பாடுகளை ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
00 கிலோ மீட்டர் ஆரம் : கலிபோர்னியா நகரில் கடந்த 2014-ஆம் ஆண்டு, 5.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்க பகுதியில் சுமார் 100 கிலோ மீட்டர் ஆரம் (Radius) அளவில் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆய்வறிக்கை : நிலநடுக்க அறிவியலில் முன்னிலை வகிக்கும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தில் (U.S. Geological Survey - USGS), 2018-ஆம் ஆண்டு நிலநடுக்க கணிப்பு பற்றிய ஆய்வறிக்கை ஒன்றை விஞ்ஞானிகள் விரைவில் ஒப்படைக்க இருக்கிறார்கள்.
உறுதி : அந்த அறிக்கையின்படி, இன்னும் மூன்று ஆண்டுகளில் சுமார் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படுவது நிகழ்தகவுப்படி (Probability) 99.9% உறுதி என்கிறது நாசா.