100 % சோலார் சக்தியில் இயங்கும் கிராமம்
நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு சோலார் சக்தி மூலம் முழுக்க, முழுக்க இயங்கும் கிராமம் ஒடிசாவில் வெற்றி பெற்றுள்ளது. பல கிராமங்களில் இது போன்ற முயற்சி தோல்வி அடைந்த நிலையில் பரிபத்தா கிராமம் வேறுபட்டு நிற்கிறது . இது இந்தியாவிற்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது. காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 02 முதல் இக்கிராமம் சோலார் மூலம் செயல்பட துவங்கியது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் பரிபத்தா கிராமம் உள்ளது . இக்கிராமம் முழுவதும் சோலார் சக்தி மூலம் செயல்படும் திட்டம் உருவாக்கப்பட்டது. வெறும் 7 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தனித்தனி சோலார் யூனிட் போடப்பட்டு இரண்டு விளக்குகளுடன் மொத்தம் 61 வீடுகளுக்கு சோலார் மின்சாரம் வழங்கப்படுகிறது .
சமூக கூடத்தில் ஒரு எல் இ டி டிவியும், 8 தெருக்களில் தெரு விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன .குறைந்த செலவில், குறைந்த பராமரிப்பில் நிறைந்த சேவை பெறும் இந்த திட்டம் ஒடிசாவில் மேலும் 3 ஆயிரத்து 900 கிராமங்களுக்கு முன்னெடுத்து செல்ல அரசு முடிவு செய்துள்ளது .