ஆண்ட்ராய்டில் வருகிறது 10 இந்திய மொழிகள்.. டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் சுந்தர் பிச்சை
கூகுளின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் குஜராத்தி உள்ளிட்ட 10 இந்திய மொழிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை, மோடி தலைமையில் நடைபெற்ற டிஜிட்டல் இந்தியா நிகழ்ச்சியின்போது உறுதி அளித்தார்.
இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 30 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் 10ல் 9 ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளம்தான் உள்ளது. எனவே அடுத்த மாதத்திற்குள், மோடியின் தாய்மொழியான குஜராத்தி உள்ளிட்ட 10 இந்திய மொழிகளில் இயங்கும் அளவுக்கு, ஆண்ட்ராய்டு இயங்குதளம் மேம்படுத்தப்படும்.
மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் கூகுளும் பங்கேற்கும். இவ்வாறு சுந்தர் பிச்சை பேசினார்.