கோழி முட்டை பிரியரா நீங்கள்? கொஞ்சம் இதையும் கேளுங்கள்!
நாம் உண்ணும் அரிசியை பிளாஸ்டிக்கில் தயாரித்த சீனா, இப்போது கோழி முட்டையையும் போலியாக தயாரிக்கத் தொடங்கிவிட்டது .
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய 'கைத்திறமை' யைக் காட்டி வந்த சீனா, தற்போது கோழி முட்டை தயாரிப்பிலும் கைத்திறமையைக் காட்டி வருகிறது. கோழி முட்டையை கோழி மட்டும்தான் போட வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர்.
போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயனங்களை பயன்படுத்துகின்றனர். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயனங்கள்அடக்கம்.
போலி முட்டை தயாரிக்க உதவும் கால்சியம் கார்பனேட் ஒரு பாத்திரத்திலும், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க மஞ்சள் வண்ணக்கலவையும், மஞ்சள் கரு மற்றும் வெள்ளைப் பகுதி உருவாக்கும் மோல்டுகள் அருகருகே இருப்பதையும் படத்தில் காணலாம்.
ரசாயனங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்ச கரு மோல்டில் ஊற்றப்படுகிறது. மஞ்சள் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயனங்கள் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது. சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதி தயார். பின்னர் இது ஒரு மணி நேரம் காய வைக்கப்படுகிறது. பாரபின் மெழுகில் தோய்த்தெடுக்கப்படும் போலி முட்டையின் மேல் செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.
நிஜ கோழி முட்டையின் ஓட்டைவிட எளிதாக உடையக் கூடியது இந்த போலி முட்டை ஓடு. ஆனால் அதைப் பற்றிய கவலை சீன வாடிக்கையாளர்களுக்கு இல்லை. நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதை விட போலி முட்டையின் சுவை அதிகமாக இருப்பதாக பேச்சு. ஆப் பாயில் போடும் போலி முட்டையின் அழகு தெரிய வருகிறது. மஞ்சள் கரு கொஞ்சம்கூட சிதறாமல் பந்துபோல் முழுதாக நிமிர்ந்து நிற்கிறதாம். மேலும், வெள்ளைக்கரு பரவும்போது நுரையும் அதிகமாக எழுகிறது.
போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள் உணவுத்துறை அறிஞர்கள்.
ஆனாலும் சீன போலி முட்டைத் தயாரிப்பாளர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. காரணம் காசு! ஒரு கிலோ கோழி முட்டை 60 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதுவே போலி முட்டை ஒரு கிலோ தயாரிக்க 6 ரூபாய் தான் செலவாகிறது. ஏன் தயாரிக்க மாட்டார்கள் ?
உணவு கலப்படம் மற்றும் போலி உணவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சீனாவில் இறப்பவர்கள் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.