மாணவர் கண்டுபிடித்த எலக்ட்ரிக் சைக்கிள்
மாணவர் சமுதாயம் இன்றைய கால கட்டத்தில் படிப்பு மட்டும் அல்லாமல் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்து அசத்துகின்றனர். மக்களுக்கு பயன்படும் வகையில் பல வித பொருட்களை கண்டுபிடித்து தங்கள் தனி திறமைகளை வெளி காட்டுகின்றனர்.
அந்த வகையில் அருப்புக்கோட்டை திருக்குமரன் நகர் 6வது தெருவை சேர்ந்த சவுடாம்பிகா மெட்ரிக்., பள்ளி பிளஸ் 1 மாணவன் அஜய் விஷால் ஆட்டோமேட்டிக் சார்ஜிங் எலக்ட்ரிகல் சைக்கிளை கண்டு பிடித்துள்ளார். இதில் பெடல் செய்தால் போதுமானது தானாகவே சைக்கிளின் கேரியரில் வைக்கப்பட்டுள்ள "லித்தியம் அயன் பேட்டரியில்' சார்ஜ் ஆகி விடும். சைக்கிளை பெடல் செய்தும் ஓட்டலாம். கால் வலித்தால் ஆக்சிலேட்டரை கூட்டியதும் சைக்கிள் தானாகவே செல்லும். இதை இயக்குவது எளிது. 4 ஆண்டு வரை பேட்டரி இருக்கும். பின்னர் பேட்டரியை மட்டும் மாற்றினால் போதுமானது. 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம். சுற்றுப்புற சூழ்நிலை மாசு ஏற்படாது. புகை வராது. எரிபொருள் தேவையில்லை. போக்குவரத்திற்கு நெரிசல் இருந்தாலும் எளிதாக சென்று விடலாம்.
மாணவன் அஜய்விஷால் கூறுகையில்,""புகை மற்றும் சுற்றுப்புற சூழலை கருத்தில்கொண்டு இந்த சைக்கிளை தயார் செய்தேன். இதில் பயன்படுத்தும் பேட்டரி கூட சுற்றுப்புற சூழலை பாதிக்காது. எளிதாக இயக்கலாம். உடலுக்கு உடற் பயிற்சி, செலவு குறைவானது. எனது தயாரிப்பை அப்துல்கலாமின், அறிவியல் ஆலோசகர் பொன்ராஜிடம் காண்பித்ததும் பாராட்டினார். கரும்பு கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பது பற்றி முயற்சி செய்து வருகிறேன். எங்கள் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஊக்கமும், ஆலோசனைகளும் தருகின்றனர்,''என்றார்.
மாணவரை பாராட்ட 89738 74296.