போலி மருந்துகளைத் தடுக்க முப்பரிமாண Barcode
போலி மருந்துகளைத் தடுக்கும் நோக்குடன், மருந்து வில்லைகளில் பதிக்கக்கூடிய முப்பரிமாண தொடர்-இலக்க குறியீடுகளை (barcode|) பிரிட்டனில் உள்ள பொறியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்தக் குறியீடுகளை உருவாக்குவதற்கு பிராட்ஃபார்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழுவொன்றே உதவியுள்ளது.
ஒவ்வொரு வில்லையிலும் பொதிக்கக்கூடிய வகையில் அவர்கள் இந்த சிறப்பு குறியீட்டு அச்சுக்களை உருவாக்கியுள்ளனர்.
ஒளியை பாய்ச்சும் ஸ்கேனர் கருவி மூலம் இந்தக் குறியீட்டு தொடர்-இலக்கத்தின் விளக்கத்தை அறிந்துகொள்ள முடியும்.
மருந்துக் கம்பனிகளும் கடிகாரக் கம்பனிகளும் இந்த தொழில்நுட்பத்தை தங்களின் தயாரிப்புகளில் பயன்படுத்த விரும்புவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.