August 27-ல் விண்ணில் பாய்கிறது ஜிசாட் 6 செயற்கைக் கோள்
நாட்டின் தகவல் தொடர்புத் துறைக்கு பெரிதும் உதவும் ஜிசாட் 6 செயற்கைக் கோள் ஜி.எஸ்.எல்.வி டி6 ராக்கெட் மூலம் வருகிற 27-ம் தேதி ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் கிரண்குமார் வெளியிட் டுள்ள செய்திக் குறிப்பில், நாட்டின் தகவல் தொடர்புத் துறைக்கு பெரிதும் உதவக்கூடிய ஜிசாட்-6 செயற்கைக் கோள் ஜிஎஸ்எல்வி. டி6 ராக்கெட் மூலம் வரும் 27-ம் விண்ணில் செலுத்தப்படுகிறது. அன்றைய தினம் மாலை 4.52 மணிக்கு ஹரிகோட்டாவில் இருந்து ஏவப்படும்.
இந்த ஜிசாட்-6 செயற்கைக்கோளில் மிகப் பெரிய அளவிலான 'ஆண்டனா' பொருத்தப்பட்டுள்ளதால், மிகச் சிறிய தொலைபேசி மூலமாகவும் நேரடியாக செயற்கைக்கோளை, எந்த இடத்தில் இருந்து வேண்டு மானாலும் தொடர்பு கொள்ள முடியும்.
இந்த ஆண்டனாவுக்கு அதிகளவிலான சிக்னலை ஈர்க்கும் ஆற்றல் இருக்கிறது. எனவே இந்தச் செயற்கைக்கோள் தகவல் தொடர்புத்துறைக்கு, குறிப்பாக பாதுகாப்புத்துறைக்கு பேருதவியாக இருக்கும்''என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குநர் சிவன் கூறும்போது,
‘ரூ.250 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக் கோள் 2,500 கிலோ எடை கொண்டது. இதனை ஏவுவதன் மூலம் இந்திய தகவல் தொடர்புத்துறை அடுத்துக் கட்டத்துக்கு முன்னேறி யுள்ளது''என தெரிவித்துள்ளார்.