பத்தாம் வகுப்பில் பதிவு செய்த வேலைவாய்ப்பு பதிவு எண்ணை மறந்தவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு
பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி / தோல்வி பெற்ற மாணவ, மாணவிகள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலக வலைதளத்தில் பதிவு செய்வது வழக்கம். தொடர்ந்து அதே பள்ளியில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பதிவு அட்டையை பெற்றுச் செல்கின்றனர். வேறு பள்ளி சென்று பயிலும் மாணவ, மாணவிகள் வேலை வாய்ப்பு பதிவு அட்டையை பெற்றுச்செல்வதில் கூட தயக்கம் காட்டுகின்றனர். அவ்வாறான மாணவ மாணவிகள் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு முடித்து வேலைவாய்ப்பு பதிவு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது முந்தைய பதிவு தொலைந்து விட்டது அல்லது பதிவு செய்த விவரத்தை பள்ளியில் இருந்து பெறவில்லை போன்ற காரணங்களைக் கூறுகின்றனர்.
இத்தகைய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஒரு அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆம். முந்தைய வேலைவாய்ப்பு பதிவு எண்ணை மறந்த மாணவர்கள் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பதிவை பதியும்போது HSC-UPDATION என்னும் TAB ல் ADD QUALIFICATION பகுதியில் REGISTRATION NUMBER க்கு நேராக உள்ள SEARCH ICON ஐ கிளிக் செய்யவேண்டும்.
பிறகு இன்னொரு புதிய விவர குறிப்பில் NAME, DATE OF BIRTH, FATHER NAME போன்ற விவரங்களை உள்ளிட்டால் அந்த மாணவரின் முந்தைய வேலைவாய்ப்பு பதிவு விவரம் திரையிடப்படும். அதைத் தேர்வு செய்தால் எளிமையாக முந்தைய வேலைவாய்ப்பு பதிவை கண்டுபிடிக்கலாம். இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. ஒரே பெயர், பிறந்த தேதி உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளபோது FATHER NAME ஐ கொடுக்காமல் தேடினால் ஒன்றுக்கு மேற்பட்ட பொருத்தங்களை திரையில் காண்பிக்கும். அப்போது மாவட்ட எண்ணை அடிப்படையாகக் கொண்டு சரியான நபரை கண்டுபிடிக்கலாம். நாம் கொடுத்த விவரங்கள் பொருந்தவில்லை என்றால் NO RECORDS FOUND என்ற செய்தி வெளியாகும்.
உங்கள் பள்ளி மாணவருக்கு நீங்கள் உதவ ஒரு வாய்ப்பு. நன்றி.
கல்வி சார்ந்த செய்திகளுக்கு.....
கல்விகுரு.காம்