கற்பதற்கு வயதில்லை
கல்வி கற்க வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, சீனாவில் 100 வயதுக்கு பிறகு ஒரு மூதாட்டி தனது பெயரை எழுத, படிக்க கற்றுக் கொண்டுள்ளார். சீனாவின் கிழக்கு மாகாணமான ஜேஜியாங்கில் உள்ள ஹங்சூ பகுதியைச் சேர்ந்தவர் சுன்ஜின். 100 வயதைக் கடந்து வாழ்ந்து வரும் சுன்ஜின், ஆரம்ப கல்வியைக்கூட கற்காததால் அவரால் சீன மொழியை எழுதவோ படிக்கவோ முடியாது.
தாய்மொழியை கற்காமல் விட்டுவிட்டோமே என்ற ஏக்கம் அவருக்குள் இருந்தது. இதனை புரிந்து கொண்ட அவரது மகன் ரோங்செங், தாயின் ஏக்கத்தை நிறைவேற்றினார். தொடர்ந்து 10 நாட்கள் அவருக்கு சீன மொழியை கற்பதற்கான அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டது. இதன் விளைவாக சுன்ஜின் தற்போது நூறு சீன எழுத்துக்களை எழுதுவதோடு, தனது, பெயரை எழுதவும் அதனை படிக்கவும் செய்கிறார். 1949 ஆம் ஆண்டு சீனாவில் 80 சதவிகிதம் பேருக்கு எழுத படிக்கத் தெரியாமல் இருந்தது. ஆனால், அது 2010 ஆம் ஆண்டு அது 4 சதவிகிதமாக குறைந்திருப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன