இந்தியாவில் வெளியானது பென்டிரைவ் வடிவிலான கணிப்பொறி
விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்டிக் ரூ.9,999க்கு Flipkart தளத்தில் கிடைக்கும் என்றும், லினக்ஸ் வெர்ஷன் விலை இன்னும் குறிப்பிடப்படவில்லை. 1.83 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் Atom Quad Core Processor கொண்டிருக்கும் இந்த ஸ்டிக் கருவி HDMI(High Definition Multimedia Interface) Port கொண்ட எவ்விதTV அல்லது மானிட்டர்களையும் கணினியாக மாற்றக்கூடியது. இன்டெல் நிறுவனம் இரு வகை ஸ்டிக் கருவிகளை இந்தியாவில் வழங்குகின்றது, விண்டோஸ் 8.1 இயங்குதளம், 32 ஜிபி இன்டர்னல் மெமரி, 2ஜிபி ரேம் மற்றும் லினக்ஸ் இயங்குதளம் உபுன்டு 14.04 இன்ஸ்டால் செய்யப்பட்டு 8ஜிபி மெமரியும், 1ஜிபி ரேமும் வழங்கப்பட்டுள்ளது.
இரு கருவிகளிலும் வை-பை 802.11bgn, ப்ளூடூத் 4.0, யுஎஸ்பி 2.0 போர்ட் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. இன்டெல் நிறுவனம் கணினி பயன்பாட்டினை புதிய வடிவில் மக்களுக்கு அளிப்பதோடு புதிய வகையானது இந்தியாவில் நிச்சயம் வெற்றி பெறும் என்று அந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் விளம்பரத்துறை தலைவர் ராஜிவ் பல்லா தெரிவித்தார்.