12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்பு பதிவை தான் படித்த பள்ளியிலேயே 15-07-2015 முதல் பதிந்து கொள்ளலாம்
2014-15 ஆம் கல்வியாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று மார்ச் 2015ல் நடைபெற்ற பொதுத்தேர்வில் தேர்வெழுதிய மாணவ மாணவியர்க்கு 15-07-2015 முதல் அசல் மதிப்பெண் சான்று வழங்கப்பட உள்ளது.
மேலும் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு பதிவை ஜூலை 15 முதல் 27ஆம் தேதி வரை அந்தந்த பள்ளிகளிலேயே மேற்கொள்ளலாம் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, பதிவுப்பணி நடைபெறும் 15 நாளகளுக்கும் மதிப்பெண் சான்று வழங்கத் தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படும்.
எனவே பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10ஆம் வகுப்பு கல்வித்தகுதியைப் பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களை மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று பள்ளியில் கொடுத்து வேலைவாய்ப்பு பதிவை மேற்கொள்ளலாம்.