டிஜிட்டல் இந்தியா திட்டத்தை தில்லியில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி
டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் தொடக்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் பல கோடி டாலர் பெறுமானமுள்ள முதலீடுகளை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.. இந்தத் திட்டத்தின் மூலம் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை இணையம் மூலம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, மைக்ரோசாஃப்ட் முதன்மைச் செயல் அதிகாரி சத்ய நாதெல்லா, டாடா குழுமத் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி, விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, "டிஜிட்டல் இந்தியா' திட்டம் தொடர்பான தங்களது கருத்துகளை முன்வைக்க உள்ளனர்.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தினால் நாட்டு மக்களுக்கு கிடைக்கப் போகும் வசதிகள். இந்தியா முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களுக்கு பிராட்பேண்ட வசதி ஏற்படுத்தி தருவதே இத்திட்டத்தின் நோக்கம். மேலும் ''டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களிலும், சுற்றுலா தளங்களிலும் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும். அரசு துறைகளையும் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைப்பதோடு, அரசின் சேவைகள் இணையதளம் வாயிலாக வழங்கப்படும் E- BASTA எனப்படும் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்கள் தங்கள் பாடநூல்களை டிஜிட்டல் முறையில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அப்படி தரவிறக்கம் செய்யும் புத்தகங்களை அவரவர் விருப்பத்திற்கேற்ப தங்களது ஸ்மார்ட் ஃபோன், டேப்லெட், மடிக்கணிணி ஆகியவற்றில் சேமித்துக்கொள்ளலாம்.
இதேபோன்று பாடங்களுக்கான ஆடியோ ஃபைல்களையும், செயல்முறை தேர்வுகளுக்கான வீடியோக்களையும் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம் அடுத்த கட்டமாக டிஜி லாக்கர் எனப்படும் ஆவண சேமிப்பு சேவையின், தனிநபர்கள் தங்களது பள்ளிச் சான்றிதழ், இடமாற்ற சான்றிதழ், ஓட்டுனர் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை டிஜி லாக்கர் வலைத்தளத்தில் இலவசமாக சேமித்து வைக்கலாம்.
இந்தச்சேவையினை பயன்படுத்த ஆதார் எண் மற்றும் செல்போன் எண் அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தினமணி