இந்தியாவில் காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிய புதிய இணையதளம் ஒன்றினை மத்திய அரசு துவக்குகிறது.
ஜூன் 2ம் தேதி துவக்கப்பட உள்ள இந்த இணையதளத்தில், பொதுமக்கள் நேரடியாகவே காணாமல் போன குழந்தைகளைப் பற்றிய தகவல்களை பதிவு செய்யலாம். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
www.khoyapaya.gov.in என்ற இந்த இணையதள முகவரியில் 3 பிரிவுகள் உள்ளன. அதில், எனது குழந்தை காணவில்லை, இந்த குழந்தையை நான் பார்த்தேன், காணாமல் போன குழந்தையை தேடுங்கள் என்று பிரிவுகள் உள்ளன.காணாமல் போன குழந்தைகளைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு இந்த இணையதளம் நிச்சயம் பேருதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.