பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம்: மோசடியில் ஈடுபடுவோருக்கு கல்வித்துறை எச்சரிக்கை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று காலை தொடங்கின. இந்த தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை 8.43 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக 2,377 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் முதல் தாளுக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்தாண்டு முதல், மொழிப்பாடங்களுக்கு கோடிட்ட விடைத்தாள் பக்கங்கள் வழங்கப்படுகிறது.
விடைத்தாள்களை மாற்றி மோசடியில் ஈடுபட்டால் 5 வருடம் தேர்வு எழுத முடியாது என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்வு மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி, முதன்மை செயலாளர் சபீதா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.