வந்துவிட்டன ஓட்டுநர் இல்லாத கார்கள்
ஓட்டுநர் இல்லாத கார்கள் தெருக்களுக்கு வருவதற்கான வாய்ப்பு மேலும் அதிகரித்திருக்கிறது.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் நான்கு இடங்களில் தானாகவே இயங்கும் ஓட்டுநர் இல்லாத கார்கள் அல்லது தானியங்கி நாற்சக்கர வாகனங்கள் சோதனை முயற்சியாக இயக்க அனுமதிக்கப் பட்டுள்ளன.
ஓட்டுநர் இல்லாத வாகனத்தொழில்நுட்பம் குறித்து ஐக்கிய ராஜ்ஜியம் ஆய்வு செய்வதன் ஒரு பகுதியாக இந்த வாகனங்களை அரசாங்கம் அனுமதித்துள்ளது.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் இந்த ஓட்டுநர் இல்லாத கார்களை சாலைகளில் அனுமதிக்க வேண்டுமானால் நாட்டின் சாலை விதிகளிலும், கார் பரிசோதனை வழிமுறைகளிலும் மாற்றங்கள் கொண்டுவருவது அவசியம் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்திருக்கிறது.
thanks BBC