மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை பிரபலப்படுத்த நாட்டின் அனைத்து விமான நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களின் பிளாட்பாரங்களில் புத்தக ஸ்டால்களை நிறுவுகிறது மத்திய அரசு.
புதுடெல்லியில் உலக புத்தக கண்காட்சி துவக்க விழாவில் கலந்து கொண்டு மத்திய மனிதவளத்துறை மந்திரி ஸ்மிருதி ராணி பேசுகையில், ஏர்போர்ட்டுகள், ரெயில் நிலையங்களில் அனைத்து மொழி புத்தகங்களையும் கொண்ட புக் ஸ்டால்களை நிறுவ ரெயில்வே மற்றும் விமானத்துறை அமைச்சகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிப்பாளர்களுக்கும், வாசிப்பாளர்களுக்கும் இடையே இடைவெளி இன்னும் நீடிக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒவ்வொரு மாநிலங்களிலும் மாவட்ட அளவில் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களின் புத்தகங்களை கொண்ட புக் கிளப் புகள் அமைக்க நேஷனல் புக் டிரஸ்டிடம் அறிவுறுத்தியிருக்கிறேன். அதுமட்டுமல்ல, இளைஞர்கள், எழுத்தாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் என 5 பேர் கொண்ட ஒரு குழுவை நாடு முழுவதும் பயணிக்க செய்து என்ன மாதிரியான புத்தகங்களை புதுமையாக வெளியிடலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்ய வலியுறுத்தியுள்ளதாக தெரிவி்த்தார்.