பரம்பரை நோய்களை குணப்படுத்தும் முயற்சியில் நவீன தொழில்நுட்பம்
உலகின் மிகப்பெரிய மருந்துக் கம்பனிகளில் ஒன்றான அஸ்ட்ரா ஸெனெகா புதிய தலைமுறை மருந்துகளை உருவாக்குவதற்கான ஆய்வுத் திட்டம் ஒன்றைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.உடலை வலுவிழக்கச் செய்யும் மரபணு ரீதியான பரம்பரை நோய்களை குணப்படுத்தும் மருந்துகளை உருவாக்குவதே இந்த ஆய்வின் நோக்கம்.
கிறிஸ்பெர் எனப்படும் முன்னேறிவரும் தொழில்நுட்பம் இந்த ஆய்வுக்காக முதற்தடவையாக பயன்படுத்தப்படவுள்ளது. குறிப்பிட்ட ஒரு நோய்க்கான மரபணுவை குணப்படுத்தும் தொழிநுட்பமே கிறிஸ்பெர் எனப்படுகின்றது.
குறித்த நோயை ஏற்படுத்துகின்ற மரபணுவுவை குணப்படுத்த எந்த மருந்து மிகச் சிறந்த வகையில் பயன்படும் என்பதை விஞ்ஞானிகள் ஆராயவுள்ளனர்.இந்த ஆய்வின் மூலம் நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் பலவகையான புற்றுநோய்களை குணப்படுத்துவதற்கான மருந்துகள் உருவாக்கப்படுவதை வேகப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.