படிப்பது பண்புகளையும் வளர்த்துக்கொள்வதற்குதான்
படிப்பு என்பது அறிவு வளர்ச்சியின் அளவாக இருந்த நிலை மாறி, வெறும் சான்றிதழ் என்ற அளவில் நிற்கின்றன காலம் இது.
என்ன படித்திருக்கிறாய் என்று கேட்டால், எஇ, எம்சிஏ என்பார்கள். ஆனால், பொது அறிவோ, சாதாரண விஷயங்கள் கூட அவர்களுக்குத் தெரிந்திருக்காது. இந்த நிலையில் அவர்கள் படித்த பட்டம் வெறும் சான்றிதழாக மட்டுமே இருக்கும். ஆனால், படித்து ஒரு டிகிரி முடிப்பதற்குள், அவர்கள் தங்களை மிகப் பெரியவர்கள் என்று நினைத்துக் கொண்டு மற்றவர்களை மதிக்காமல் ஏளனப்படுத்துவதும் உண்டு.
படித்த படிப்பு அறிவை வளர்க்கத்தான் பயன்படவில்லை. ஆனால், கைநிறைய சம்பாத்தியத்தை பெற்றுத் தருகிறது. அதை சேமிக்கவும், நல்ல வழியில் செலவிடமும் நிச்சயம் அறிவு வேண்டும். எனவே, படிக்கும் போதே தங்களது பொது அறிவையும், நல்ல சிந்தனைகளையும், பண்பையும் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இதற்கு ஒரு உண்மைச் சம்பவம் எடுத்துக் காட்டாக உள்ளது.
அதாவது,
நண்பர் ஒருவர் ஆபிரஹாம் லிங்கனிடம்,”"படிப்பதால் பணம் கொட்டப் போவதில்லை. பின் ஏன் நீங்கள் எப்போதும் எதையாவது படித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு லிங்கன்,”"நான் பணம் சேர்ப்பதற்காகப் படிக்கவில்லை. பணம் வரும்போது எப்படிப் பண்போடு வாழ வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவே படித்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
எனவே, இளைஞர், இளைஞிகளும், படிப்போடு பண்பையும் படித்து, செல்வம் வரும் போது பண்போடு நடக்கவும் வேண்டும்.
படிப்பது இதற்காகத்தான்.