10,11,12ம் வகுப்பு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்க நாளை(03-01-2023) கடைசி நாள்
பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், நாளைக்குள் (03/01/2023) விண்ணப்பிக்க வேண்டும்
நடப்பு கல்வி ஆண்டிற்கான, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள், வரும், மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ளன பிளஸ் 1 பொது தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு விண்ணப்பித்து வராதோர், பிளஸ் 2 பொது தேர்வு எழுதவும், பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத எழுத விண்ணப்பிக்கலாம்
இதில் பங்கேற்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்களுக்கு, டிச., 26ல் விண்ணப்பப் பதிவு துவங்கியது. பதிவுக்கான கடைசி தேதி, நாளை முடிகிறது தேர்வர்கள், மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டு உள்ள, அரசு தேர்வு இயக்குனரக சேவை மையங்களுக்கு நேரில் சென்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, 'ஆன்லைன்' வழியில் விண்ணப்பிக்கலாம்.
நாளைக்குள் விண்ணப்பிக்க தவறுவோர், ஜன., 5 முதல் 7 வரை, சேவை மையத்துக்குச் சென்று, 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் இதற்கு, பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு 1,000 ரூபாய்; 10ம் வகுப்புக்கு, 500 ரூபாய் என, தேர்வு கட்டணத்துடன் கூடுதல் தொகை செலுத்த வேண்டும் என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 10ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில பாட தேர்வுகளை எழுத விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, ஐ.டி.ஐ., படித்தவர்கள்,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தமிழ் மற்றும் ஆங்கில பாடத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை, சேவை மையங்களின் விபரங்கள், ஆன்லைனின் விண்ணப்பிக்கும் முறைகள், தனி தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை, https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என, அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது