மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பதிவு & புதுப்பிக்க அவகாசம்
தற்போது 6 முதல் 12ம் வகுப்பு பயிலும் சிறுபான்மை இன மாணவர்கள் மற்றும் போட்டித்தேர்வுகளில்(NMMS) வெற்றி பெற்ற மாணவர்களுக்கும 12ம் வகுப்பு முடித்து, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு, மத்திய அரசின் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகையை, கடந்த கல்வி ஆண்டில் பெற்ற மாணவர்கள், இந்த ஆண்டும் பெறுவதற்கு பதிவை புதுப்பிக்க வேண்டும். புதிய மாணவர்கள புதியதாக பதிவு செய்யவேண்டும். இது குறித்து, scholarships.gov.in என்ற இணையதளத்தில், நவம்பர் 30க்குள் பதிவை புதுப்பிக்க வேண்டும் என, மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துஉள்ளது.