மழையால் 8ம் வகுப்பு தேர்வு தள்ளிவைப்பு
அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மாவின் அறிவிப்பு:தனி தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று முதல் 12ம் தேதி வரை நடக்கவிருந்தது.
இந்நிலையில், மழை காரணமாக இன்றும், நாளையும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, இன்றும், நாளையும் எட்டாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கு நடக்கவிருந்த, தமிழ், ஆங்கில மொழி பாடத் தேர்வுகள் மட்டும் தள்ளி வைக்கப்படுகின்றன. மற்ற தேர்வுகள் திட்டமிட்ட தேதியில் நடக்கும். தள்ளி வைக்கப்படும் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.