பணத்தை இழந்தவர் எல்லாம் பிச்சைக்காரன் ஆவதில்லை. எவர் ஒருவர் தன் தன்னம்பிக்கையை இழக்கிறாறோ அவரே பிச்சைக்காரர் ஆகிறார்.
- பணம் நிம்மதியான வாழ்க்கையைத் தரும் என்று நீங்கள் நினைத்தால், நிம்மதியை தேடிய உங்கள் பயணம் என்றும் முடிவுறாது.
- பணம் இருந்தால் சொர்க்கத்தை கூட விலைக்கு வாங்க முடியும். ஆனால் மனம் இருந்தால் தான் அதை வைத்து மகிழ்ச்சியாக வாழ முடியும்.
- கடவுள் எல்லோர்க்கும் சமமாக வழங்கிய பொதுவான செல்வம் நேரம் தான். நேரத்தை வீணடிப்பவர்கள் ஏழையாகவும், பயன்படுத்தியவர்கள் பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள்.
- வாழ்வில் சிலவற்றை விரைவில் அடைந்து விடுவோம். சிலவற்றை அடைய கால தாமதம் ஆகலாம்.
- சிலவற்றை அடைய முடியாமலேயே கூட ஆகலாம். இது அனைவருக்கும் பொருந்தும்.
- இன்ப துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள், ஏமாற்றங்கள் அனைத்தும் நிறைந்தது தான் வாழ்க்கை.
- வாழ்வில் கிடைப்பதையும் இழப்பதையும் வைத்து உங்கள் மகிழ்ச்சியை நிர்ணயித்தால் உங்களால் என்றும் முழுமையான மகிழ்ச்சியை உணர முடியாது.
- கடவுள் கொடுப்பதை திருப்தியுடனும் மகிழ்வுடனும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
- இல்லாததை நினைத்து ஏங்காமல் இருக்கும் அனைத்திற்கும் நன்றி சொல்லுங்கள்.
- ஒவ்வொரு நிமிடமும் அனுபவிக்கும் அனைத்திற்கும் நன்றியோடு இருங்கள்.
- நீங்கள் அனுபவிக்கும் எல்லாமும் எல்லோருக்கும் இங்கு கிடைப்பதில்லை.
- சில நேரங்களில் இல்லாததை நினைத்து, இருப்பதை அனுபவிக்க மறந்து விடுகிறோம்.
- திருப்தியுடன் ஒவ்வொரு நாளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
- திருப்பதியுடன் ஒவ்வொரு நாளையும் நிறைவு செய்யுங்கள்
- அதன் பிறகு பாருங்கள் உங்களைப் போல அழகான வாழ்க்கையை வாழ இந்த உலகில் யாராலும் முடியாது.