தொடர்ந்து தோல்விகளை சந்திப்பவர்கள் எப்படி வெற்றியை அடைவது?

உங்களுக்கு பல பிரச்சினைகள் நீ அதனை எதிர்த்துப் போராடாத வரைக்கும் அந்த பிரச்சினைகள் எல்லாமே உங்களுக்கு 'தோல்விகளை' மட்டுமே பரிசாக அளிக்கும்.
நமது இலக்குகள் ஒவ்வொன்றையும் நோக்கி பயணிக்காமல் பிரச்சினைகளுக்காக பயந்து ஓடிக்கொண்டே இருந்தால் கடைசியில் எதிலுமே வெற்றியை பெற முடியாது.
ஒரு அழகான ஊரில் இளைஞன் ஒருவன் கல்லூரிக்கு சென்று படித்துக் கொண்டு இருந்தான். அவன் படிப்பில் ரொம்ப கெட்டிக்காரன் அது மட்டுமல்லாமல் இலக்கியம், கலை, விளையாட்டுத் துறையிலும் படு கெட்டிக்காரன். ரொம்பவே சுறுசுறுப்பான பையன்.
அவனுடைய குடும்பம் பரம்பரையாக செல்வ செழிப்பாக இருந்தார்கள். தொடர்ந்து பணக்காரர்களாக வாழ்ந்து வந்தார்கள். அது மட்டுமில்லாமல் அந்த குடும்பம் கல்வியிலும் சிறந்து விளங்கியது.
அந்த மாதிரி குடும்பமே இருந்தாலும், அந்த பையனிடம் ஒரே ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அது என்ன விடயம் என்றால் அவனுக்கு சின்ன வயதில் இருந்தே ரொம்ப ஆசையாக டென்னிஸ் விளையாடுவது தான்.
அவன் நன்றாகவே விளையாடுவான் - ஒரு திறமையான விளையாட்டு வீரன் ஆவான். அந்த இளைஞனைப் பார்த்து டென்னிஸ் விளையாடுவது எல்லாம் வேண்டாம். நடிப்பு துறைக்கு சென்று நடிகனாக வரலாம் என்று சொன்னார்கள்.
ஆகையால் அவன் நடிப்பு பயிற்சியில் ஈடுபடச் சென்றான். அந்த நேரத்தில் கல்லூரியில் ஒரு போட்டி நடக்கிறது. அந்த போட்டி என்னவென்றால் பார்த்தால் நடித்து காட்டுவது தான். அந்த போட்டியில் கலந்துக் கொண்டு பரிசு பெறுகிறான்.
அவன் அந்த நடிப்புத் துறையையும் விட்டு விலகி கவிதை எழுத ஆசைப்பட்டான். அந்த போட்டியில் அவன் கலந்துக் கொண்டு வென்று பரிசு பெற்றான். அதன் பின்பு அந்த நடிப்புத் துறையையும் விட்டு விலகி கவிதை எழுத ஆசைப்படுகிறான். கவிதை எழுதிப் பார்க்கலாம் என்று போனான் அதுவும் சரியாக இல்லை. அதையும் விட்டு விலகி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
இந்த மாதிரி ஒவ்வொரு துறையிலும் அவன் கலந்துக் கொண்டு வெற்றிகளை குவித்து சாதிக்காமல் வந்து விட்டான்.
அதுவும் பாதிலேயே சின்ன சின்ன வெற்றியை அடைந்த உடனே வெளியே வந்து விடுகிறான்.இதே போல் எல்லா துறைகளிலும் அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தான்.
அவனுடைய கல்லூரி படிப்பாக இருந்தாலும் சரி வாழ்க்கையாக இருந்தாலும் சரி எதிலுமே சரியில்லை. இதனை நினைத்து அவனுடைய பெற்றோர்கள் ரொம்பவே பயந்தார்கள். உடனே அவனுடைய தந்தை இதை பார்த்து அவனிடம் பேச அழைத்தார்.
அவனுடைய தந்தை மகனை அழைத்து உனக்கு என்ன பிரச்சனை ஏன் இந்த மாதிரி நடந்து கொள்கிறாய் என்று கேட்டார் .
அதற்கு அவன் தன் தந்தையிடம் பதில் சொன்னான். அப்பா என்னால் எந்த வேலையாக இருந்தாலும் சரி , விளையாட்டாக இருந்தாலும் சரி எதிலையுமே சரியாக கவனம் செலுத்த முடியவில்லை இது எனக்கு ஒரு பிரச்சனையாக இருக்கிறது என்று சொன்னான்.
ஆகையால் தான் நான் எல்லா துறைகளிலும் முயற்சி செய்து பார்த்தேன். இதுவரைக்கும் எந்த துறையும் எனக்கு வெற்றியாக அமையவில்லை.
அதனால் எல்லா துறைகளிலும் முயற்சி செய்து பார்த்து விட்டு அடுத்தடுத்த துறைகளுக்கு சென்று பயிற்சியில் ஈடுபடுகிறேன் என்று சொன்னான்.
அவனுடைய மனதில் இந்த மாதிரி ஆழமான ஒரு கருத்து இருந்தது. இதனை அறிந்த அவனுடைய தந்தை அவனுக்கு ஒரு கதையினை கூறி விளக்கினார்.
ஒரு காட்டில் புறா ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த புறா தன்னுடைய கூட்டில் ஒரு நாளைக்கு மேல் தங்குவதே இல்லை.
ஏனென்றால் ஒரு நாளை கடந்தவுடன் அந்த கூட்டில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. அந்த புறா நினைத்தது, தன்னுடைய கூட்டில் இருந்து தான் துர்நாற்றம் வீசுகிறது என்று நினைத்து ஒவ்வொரு நாளும் தன் கூட்டினைை பிரித்து மாற்றி மாற்றிக் கட்டுகிறது.
ஒவ்வொரு நாளும் இந்த மாதிரி கூட்டினை பிரித்து மாற்றி காட்டுவதால் அது ரொம்பவே சலிப்படைந்து விடுகிறது. அதன் பின் யோசித்தது என்ன செய்வது என்று ஒரு நாள் தன்னுடைய மூத்த புறாவிடம் சென்று ஆலோசனைகளை கேட்டது.
அதற்கு அந்த மூத்த புறா சொன்னது துர்நாற்றம் வருவது உன்னுடைய கூட்டிலிருந்து இருந்து வரவில்லை. அது உன் உடம்பில் தான் இருந்து வருகிறது.
எத்தனை முறை கூட்டினை மாற்றி கட்டினாலும், உன் உடம்பிலிருந்து வரும் துர்நாற்றம் உன்னோடு மட்டும் தான் வரும் என்று கூறி அந்த புறாவிடம் புரிய வைத்தது. அந்த புறா ஆனது தன்னுடைய கூட்டினைை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து தவறாகவே புரிந்து கொண்டது.
அந்த மாதிரி புறா நினைக்காமல் உனக்குள் இருக்கும் பிரச்சினைகளை எதிர்த்து போராடினால் தான் வெற்றி கிடைக்கும். உனக்கு வரும் பிரச்சினைகளை நீ எதிர்த்துப் போராடாத வரைக்கும் அது உனக்கு 'தோல்விகளையே' மட்டும் தான் பரிசாக கொடுக்கும்.
நம் இலக்குகள் ஒவ்வொன்றையும் சின்ன சின்ன பிரச்சினைகளுக்காக விட்டு விலகி ஓடிக்கொண்டே இருந்தால் இறுதியில் எந்த செயலிலும் வெற்றி பெற முடியாது என்று கூறி மகனுக்கு புரிய வைத்தார்.