சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்புக்கு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 வகுப்புகளின் முதல் பருவத் தேர்வின் 'மைனர் சப்ஜெக்ட்ஸ்' எனப்படும் கூடுதல் பாடங்களுக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு பொதுத் தேர்வுகளை இரண்டு பருவ தேர்வுகளாக பிரித்து நடத்த சி.பி.எஸ்.இ. எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் சமீபத்தில் முடிவு செய்தது. இதற்கான முதல் பருவ தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சி.பி.எஸ்.இ. வெளியிட்ட அறிவிப்பு:நவ. 17 - டிச. 7 வரை 10ம் வகுப்புக்கு மைனர் பாடங்களுக்கான முதல் பருவ தேர்வுகள் நடக்கும். பிளஸ் 2வுக்கு நவ. 16 - டிச. 30 வரை மைனர் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கும்.