பிஎட் கணினி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு மறுப்பு
தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலை யில்லா பட்டதாரிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
மாநில அரசுப் பள்ளி களில் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்கவும், அவற்றின் மூலம் கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு கற்பிக்க வும், கம்ப்யூட்டர் பயிற்று விப்பாளர்களை நியமிக்க வும், சமக்ர சிக்சா (இடை நிலைக் கல்வி) திட்டத் தின்கீழ் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. ஆனால், மத்திய கல்வி அமைச்சகம் குறிப்பிட்டு ள்ள வழிகாட்டுதல்களை தமிழக அரசுபின்பற்ற வில்லை. தமிழக அரசின் இடைநிலைக்கல்வி மாநில மாணவர்களுக்கு
பட்டதாரிகள் சங்கம் 'பகீர்'
திட்ட இயக்குனர் ஆர்த்தி மே மாதம் 31ம் தேதியிட்ட செயல்முறை கடிதத்தில், 'நடுநிலைப் பள்ளிகளில் ஹைடெக் லேப் அமைக் கப்பட்டு, அதில் பணிபு ரிய நிர்வாகி மற்றும் பயிற் றுவிப்பாளர் பணியிடம் உருவாக்கப்படுகிறது' என அறிவித்தார். ஆனால், நிர்வாகி மற்றும் பயிற்றுவிப்பாளர் பணியிடத்துக்கு மத்திய அரசின் கல்வி அமைச்சகம் வெளியிட்ட விதிமுறை களை புறந்தள்ளி, முறை யான கல்வித்தகுதி இல் லாத 'இல்லம் தேடிக் கல்வி' தன்னார்வலர்களை எமிஸ் மற்றும் யுடிஐஎஸ்இ டேட்டா என்ட்ரி பணிக ளுக்கு மட்டுமே நியமித்து பாதிப்பை அவர் ஏற்படுத் தியுள்ளார்.
மாணவர்களுக்கு கணினி கல்விக்காக மத்திய அரசு வழங்கும் ஐசிடி நிதி யில், தமிழக அரசு ரூ.519 கோடியில் 8 ஆயிரத்து 209 பள்ளிகளில் 'ஹைடெக் லேப்கள்', ரூ.455 கோடி யில் 22 ஆயிரத்து 931 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள், ரூ.101 கோடியில் 79 ஆயிரத்து 723 பள்ளி ஆசிரியர்களு க்கு டேப்லட் என மொத் தம் ஆயிரத்து 76 கோடிக்கு கெல்ட்ரான் நிறுவனத்துக்கு டெண்டர் விட்டுள்ளது.
தமிழக அரசே நடத்த வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒரு பயிற்றுவிப்பாளர் கொடுத்தது முறையல்ல. மேலும், குறைந்த கல்வித் தகுதி உடைய பணியாளர் களை கெல்ட்ரான் நிறு வனம் நியமித்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு மேலாக வேலையின்றி காத்திருக்கும். பிஎட் கணினி ஆசிரியர்களுக்கான பணிவாய்ப்பு மறுக்கப் பட்டு, மற்ற பாடங்களில் பட்டம் பெற்றவர்கள் பெரும்பான்மையாக நிய மிக்கப்பட்டுள்ளனர்.
இது பயிற்றுவிப்பாளர் பணியிடங்களுக்கு கணினி அறிவியல் படித்த பிஎட் பட்டதாரிகளையே நிய மிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் 2014ல் வழங்கிய தீர்ப்புக்கு எதி ரானது ஆகும். மத்திய அரசு வழங்கும் ஐசிடி நிதியில், ஒரு பள்ளியில் பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வழங்கி வரும் நிலையில், தமிழகத்தில் பணிபுரியும் நிர்வாகி மற் றும் பயிற்றுவிப்பாளருக்கு ரூ. 11 ஆயிரத்து 452 என்ற அளவில் குறைவான சம் பளம் வழங்கப்படுகிறது. எனவே தமிழக அர சுக்கு வழங்கப்படும் மத் திய அரசின் ஐசிடி நிதி முறையாக பயன்படுகிறதா என்பதை ஆய்வுச் செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும். மேலும், மத்திய அர சின் கல்வி அமைச்சகம் வெளியிட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படு கிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு குமரேசன் கூறியுள்ளார்.