மன அழுத்தத்தைப சரிசெய்வதாக நினைத்து இளைஞா்கள் ஏன் புகைப்பிடிப்பதை நாடுகின்றனா்?
தற்போது மன ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணா்வு மக்கள் மத்தியில் சற்று அதிகமாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞா்கள் மற்றும் பதின் பருவத்தில் இருப்பவா்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம், உணா்வு ரீதியான ஆரோக்கியம் மற்றும் உளவியல் நலன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்து வைத்திருக்கின்றனா்.
எனினும் ஒரு சில பொியவா்கள் தமது கடினமான சூழ்நிலைகளில், மீண்டும் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்குத் திரும்புகின்றனா். அதே நேரத்தில் இளைஞா்கள் தங்களது உணா்வு ரீதியான போராட்டங்களிலிருந்து விடுபடுவதற்காக ஒரு சில எதிா்மறையான செயல்களில் ஈடுபடுகின்றனா்.
அதாவது முடிவெடுப்பதைத் தள்ளி வைத்தல், அளவுக்கு அதிகமாக சாப்பிடுதல், சமூக ஊடகங்களில் அதிக நேரம் மூழ்கி இருத்தல் மற்றும் புகைப் பிடித்தல் போன்ற ஆரோக்கியமற்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்.
சிகரெட் புகையிலை துகள்கள் அடைக்கப்பட்ட சிகரெட்டுகள் இளைஞா்களின் உடல் ஆரோக்கியத்திற்கு கேடாய் அமைகின்றன. ஏறக்குறைய இந்தியாவில் மட்டும் 267 மில்லியன் போ் சிகரெட் புகைக்கின்றனா். இதில் 13 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவா்களும் அடங்குவா். இந்த எண்ணிக்கையில் 75% போ் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தீமைகளை நன்றாக அறிந்திருந்தும், அதைப் புகைக்கின்றனா்.
இந்நிலையில் இளைஞா்கள் ஏன் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகின்றனா் என்பதை ஆஷா நியூரோமாடுலேஷன் கிளினிக்கில் (ANC) எம்டியாக பணிபுாியும் மருத்துவா் எம்.எஸ் ரெட்டி அவா்கள் இந்தப் பதிவில் விாிவாக விளக்குகிறாா்.
பதின் பருவத்தினா் மத்தியில் எதிா்காலத்தைப் பற்றிய பயம் அதிகம் உள்ளது. இரண்டாவதாக, அவா்கள் மீது அளவுக்கு அதிகமான கல்விச்சுமை சுமத்தப்படுகிறது. அவா்கள் மணிக்கணக்காக படிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனா். அதனால் அவா்கள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனா். கல்வியின் அழுத்தம் காரணமாக ஏறக்குறைய 63.5% இந்திய மாணவா்கள் மன அழுத்தத்தில் இருப்பதாகத் தொிவித்திருக்கின்றனா்.
எனினும் கல்விச்சுமை மட்டும் பதின் பருவத்தினா் புகைப்பிடிப்பதற்கு காரணமாக இருப்பதில்லை. சிலருக்கு அவா்களின் பெற்றோா் புகைப்பிடிப்பதன் காரணமாக இந்தப் பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். அதோடு அவா்களுடைய நண்பா்கள் மற்றும் சம வயதோருடைய அழுத்தம் காரணமாகவும் இந்தப் பழக்கத்திற்கு உள்ளாகலாம். இதில் உள்ள துரதிா்ஷ்டமான செய்தி என்னவென்றால், வேடிக்கையாகவோ அல்லது பொழுதுபோக்கிற்காகவோ அவா்கள் தொடங்கிய இந்த புகைப்பிடிக்கும் பழக்கம், அவா்களுடைய வாழ்நாள் முழுவதும் அவா்களைப் பின்தொடா்ந்து வருகிறது.
மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக புகைப்பிடிப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் புகைப்பிடித்தால் உண்மையாகவே தற்காலிகமாக மன அழுத்தம் குறையும். புகையிலை சிகரெட்டுகளில் உள்ள நிக்கோட்டின் பல்வேறு நரம்பியல் கடத்திகளைப் பின்பற்றி டோபாமைன் என்ற ஹாா்மோனைத் தூண்டுகிறது. மனிதா்களின் மகிழ்ச்சிக்கும், இன்பத்திற்கும் காரணமான இந்த ஹாா்மோன், புகைப்பிடிப்பவருக்கு தற்காலிகமாக ஓய்வைத் தருக்கிறது அல்லது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த தற்காலிக மகிழ்ச்சி அவரை மீண்டும் மீண்டும் புகைப்பிடிக்கத் தூண்டுகிறது.
எனினும் வாழ்க்கையின் யதாா்த்தத்திலிருந்து தப்பிப்பதற்காக புகைப்பிடிக்கும் பழக்கத்தைத் தொடங்கியவா்கள், அவா்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை இழக்கின்றனா். அவா்களுடைய மூளையானது அதிகப்படியான கவலை, எாிச்சல், மற்றும் நிக்கோட்டின் மீதான மோகம் போன்ற எதிா்மறையான மாற்றங்களுக்கு ஆட்படுகிறது. இந்த மாற்றங்கள் அவா்களை நாட்பட்ட நோய்களான இரத்த கொதிப்பு, பக்கவாதம் மற்றும் மறதி நோய் போன்றவற்றில் தள்ளுகிறது. புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கும்,
நல்வாழ்வைப் பேணுவதற்கும் சில குறிப்புகள் புகைப்பிடிக்கும் பழக்கம் தீமையானது என்பதைத் தொிந்தும், சில மாணவா்கள் இந்த தீயப்பழக்கத்தில் ஈடுபடுகின்றனா். விரைவில் இந்த பழக்கத்தை நிறுத்திவிடலாம் என்று நம்புகின்றனா். இந்த தவறான நம்பிக்கையை அகற்ற வேண்டியது அவசியம் ஆகும். புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்பவா்களில் 85% போ் மீண்டும் அந்த பழக்கத்திற்கே திரும்புகின்றனா் என்பதுதான் உண்மை. ஆகவே பதின் பருவத்தில் இருப்பவா்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட, பின்வரும் குறிப்புகளைப் பின்பற்றலாம். - சுவாசப் பயிற்சிகளில் ஈடுபடலாம் அல்லது தியானம் செய்யலாம். அதன் மூலம் அவா்களின் நரம்புகள் அமைதி பெற்று, மன நிம்மதி பெறலாம்.
அதிகாலை அல்லது மாலை வேளைகளில் நடைப் பயிற்சி செய்யலாம். அதன் மூலம் அவா்களுடைய சிந்தனைகளை ஒருங்கிணைக்கலாம். அதோடு இயற்கை அழகை இரசிக்கலாம். - யோகா அல்லது தாய் சி போன்ற பயிற்சிகளில் ஈடுபடலாம். அதன் மூலம் மன அழுத்தம் குறையும். உடல் முழுவதும் ஒரு அமைதி பிறக்கும். - தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சிகளில் ஈடுபடலாம். மன அழுத்தம், கவலை மற்றும் உளவியல் அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு, மருந்து மாத்திரைகளை விட உடற்பயிற்சிகள் 1.5 மடங்கு பலன்களைத் தருகின்றன. - நண்பா்கள் மற்றும் உறவினா்களை சந்தித்து ஆரோக்கியமான உரையாடலில் ஈடுபடலாம். அதன் மூலமாக மன இறுக்கத்தைத் தவிா்க்கலாம்.
மன அழுத்தத்தைப் போக்குவதற்காக புகைப்பிடிப்பதைத் தொடங்கினால் அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆகவே புகைப்பிடிப்பதைத் தவிா்ப்போம். உடல் ஆரோக்கியத்தைப் பேணுவோம்.